»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டில் பஞ்சாயத்து பண்ணிய அனுபவத்தை வைத்து மல்லுவுட்டில் (மலையாள திரையுலகில்) பஞ்சாயத்துப்பண்ண போகிறார் கேப்டன் விஜயகாந்த்.

தமிழ் சினிமாவில் யாருக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் உடனே "சின்னக் கவுண்டரைப்" பார்த்து நியாயம்கேட்பார்கள், கவுண்டரும், ஆலமரத்தடி, சொம்பு இல்லாமல் இரு தரப்பினரையும் உட்கார வைத்து பஞ்சாயத்துபேசி சமாதானம் ஏற்படுத்தி வைப்பார்.

கோலிவுட்டில் மட்டும் நடந்த வந்த இந்த பஞ்சாயத்து இப்போது மலையாளக் கரைக்கும் போகப் போகிறதாம்.மலையாள நடிகர் சங்கத்திற்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

நடிகர், நடிகைகள் ஸ்டார் நைட்களில் கலந்து கொள்வதும், அதை டிவியில் ஒளிபரப்புவதும் சினிமாவின் மீதானமோகத்தைக் குறைப்பதாக தயாரிப்பாளர்கள் கருதினர். இதனால் ஸ்டார் நைட்களில் கலந்து கொள்ளும் நடிகர்,நடிகைகளுக்கு சகட்டு மேனிக்குத் தடை விதித்தனர்.

இந்தத் தடையில் மீரா ஜாஸ்மின், நவ்யா நாயர் உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் தப்பவில்லை. நம்மூருபானுப்பிரியாவுக்குக் கூட தடை விழுந்தது.

தடையை அடுத்து அந்தத் தயாரிப்பாளர்களின் படங்களுக்கு நடிகர்கள் சரியான ஒத்துழைப்புத் தரவில்லை.இதனால் இருதரப்புக்கும் வெட்டுக் குத்து நடக்காத குறையாக மோதல் முற்றிவிட்டது.

இன்று கொச்சியில் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, சத்யன்உள்ளிட்டோருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது.

தங்களுக்குள் பேசிப் பார்த்தும் ஒன்றும் சரி வராமல் போனால் இந்திய அளவில் பிரபலமான திரையுலகப்புள்ளிகளை அழைத்து பஞ்சாயத்துப் பேச மலையாள நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளதாம்.

பஞ்சாயத்துக்குப் பெயர் போன விஜயகாந்த், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, எவர்கிரீன் சூப்பர்ஸ்டார்அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரையும் இந்த பஞ்சாயத்துக்கு அழைத்துள்ளனராம்.

விரைவில் இந்தக் குழுவினர் சம்பந்தப்பட்டவர்களுடன் கூடிப் பேசி குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வர முயலப்போகிறார்களாம்.

Please Wait while comments are loading...