Don't Miss!
- News
விடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி! "கிளீனர் டூ உதவி மேலாளர்" ஸ்டேட் வங்கியில் ஒரு சாதனை பெண் -யார் அது?
- Sports
"ஒரே கல்லில் 2 மாங்காய்" ஒரே இன்னிங்ஸில் தோனி - சச்சின் சாதனை தகர்த்த ரிஷப் பண்ட்.. எப்படி தெரியுமா
- Finance
ஒரு கப் டீ 20, சேவை கட்டணம் ரூ.50.. மொத்த கட்டணம் ரூ.70.. சதாப்தி ரயில் பயணிகள் ஷாக்!
- Automobiles
டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
விஜய்க்கு நடிப்பு மேல் ஆர்வம் வரும்னு எங்களுக்கு தெரியாது.. விஜய் அம்மா சொன்ன செம தகவல்!
சென்னை : தமிழில் முன்னணி கதாநாயகனாக இருக்கக்கூடிய நடிகர் விஜய், ஆரம்ப காலத்தில் செய்த விஷயங்கள் தற்போது வெளிவந்துள்ளது.
சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
நேற்று நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 66 படக்குழு படத்தின் பல அப்டேட்களை வெளியிட்டு அசத்தியது.
திருமண நாளில் உயிரிழந்த பிரிட்டிஷ் பாடகரின் காதலி...நொறுங்கிப் போன பாடகர்

வாரிசு டைட்டில்
தளபதி 66 படத்திற்கு வாரிசு என பெயர் வைக்கப்பட்டதுடன், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் போஸ்டர், தேர்ட் லுக் போஸ்டர் என்று அடுத்தடுத்து அப்டேட்களையும் வெளியிட்டு அசத்தி விட்டனர் அப்படக்குழுவினர். அப்படத்தின் போஸ்டர்கள் வெளிவந்த நிமிடத்தில் இருந்து மற்ற படங்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்ற சோசியல் மீடியாக்களில், விவாதமே நடந்தது. அதுஒரு பக்கம் இருக்க, தளபதி 67 படத்திற்கான தகவலும் வெளிவந்தது.

மீண்டும் லோகேஷ்
தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் ,கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய அனைத்து படங்களும் மெகா ஹிட் ஆனதை தொடர்ந்து இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய் நடித்திருந்தார். அந்த படமும் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. சமீபத்தில் லோகேஷ் இயக்கிய விக்ரம் படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்து வரும் நிலையில், இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காலம்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் விஜய், தமிழ் சினிமாவை ஆளும் நாயகனாக மாறுவார் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். நடிகர் விஜய் சினிமாவுக்குள் எப்படி நுழைந்தார் என்ற சுவாரஸ்ய தகவல்களை விஜய்யின் அம்மா ஷோபா கூறியுள்ளார்.
விஜய்க்கு 18 வயது இருக்கும் பொழுது நடிக்க ஆர்வம் இருப்பதாக தன் அம்மாவிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு ஷாக்காகி உள்ளனர் விஜய்யின் அம்மாவும் அப்பாவும். தன் அப்பாவான எஸ் ஏ சந்திரசேகரிடமும் நீங்கள் படத்தை தயாரிக்கிறார்களா? அல்லது நான் வெளியில் சென்று முயற்சி செய்யட்டுமா என்று கேட்டுள்ளார் நடிகர் விஜய். ஒரு நடிகனாகும் ஆர்வம் விஜய்க்கு இருப்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நடிகன் ஆக வேண்டும் என்றால் முதலில் என்னிடம் நடித்து காட்டு என்று அப்பா சந்திரசேகர் கூறியுள்ளார்.

டேலண்ட் இருக்கா?
உன்னிடத்தில் என்ன டேலண்ட் இருக்கிறது, நீ என்ன செய்யப் போகிறாய் என்பது எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. முதலில் நடித்துக் காட்டு உன் நடிப்பு மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பார்க்கலாம் என்று கூறியுள்ளனர். உடனே விஜய் ரஜினி படமான அண்ணாமலை படத்திலிருந்து ஒரு நீண்ட வசனத்தை பேசி நடித்து காட்டியுள்ளார். அது நடிப்பைக் கண்டு வியந்து போன அவரது அம்மாவும் அப்பாவும் இவருக்கு நடிப்பு வருவதை கண்டு வியந்து நாளைய தீர்ப்பு என்ற படத்தை முதன் முதலில் சொந்தமாக தயாரித்துள்ளனர். பிறகு வரிசையாக நான்கு படங்களை தாங்களே தயாரித்ததாகவும் கூறியுள்ளார் ஷோபா. அந்த வெற்றிக்கு பிறகே விஜய்க்கு வெளியிலிருந்து படங்கள் வரத் தொடங்கியது. ஆனால் விஜய்க்கு நடிப்பு மீது இவ்வளவு ஆர்வம் இருக்கும் என்று எங்களுக்கு ஆரம்ப கட்டத்தில் தெரியவில்லை என்று மனந்திறந்து நடிகர் விஜய்யை பற்றி கூறியுள்ளார் ஷோபா.

ஆரம்ப காலத்து ஹிட் படங்கள்
ஆரம்ப காலத்தில் இவர் நடித்திருந்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை, பூவே உனக்காக, மாண்புமிகு மாணவன், செல்வா, காலமெல்லாம் காத்திருப்பேன், லவ்டுடே, ஒன்ஸ்மோர் போன்ற அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் படங்களாக இவருக்கு அமைந்து இவரது சினிமா வாழ்க்கையை பிரகாசமாக மாற்றியது. தற்போது தமிழில் இவர் முன்னணி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். 90களில் நாயகனாக நடிக்க தொடங்கிய விஜய் இன்றுவரை சினிமாவை ஆண்டு கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.