»   »  கவிழ்த்திய காளை-கொந்தளித்த டி.ஆர்.

கவிழ்த்திய காளை-கொந்தளித்த டி.ஆர்.

Subscribe to Oneindia Tamil
Simbu with Vedhika

சிம்பு நடித்து வெளியாகியுள்ள காளை படு 'கொம்பாக' வந்திருப்பதால் அவரது தந்தை விஜய டி.ராஜேந்தர் பெரும் கோபமாக உள்ளாராம். இயக்குநர் தருண் கோபியை கடுமையாக விமர்சித்து திட்டினாராம்.

சிம்பு நடிக்க ஒரே நேரத்தில் மூன்று படங்களுக்கு படப்பிடிப்பை தொடங்கினார்கள். அதில் முதலில் ஆரம்பித்தது கெட்டவன். பின்னர் வந்தது காளை, லேட்டஸ்டாக தொடங்கியது சிலம்பாட்டம்.

இதில் கெட்டவன், சில பல காரணங்களால் தள்ளிப் போய் விட்டது. இதையடுத்து காளையை வேகம் வேகமாக எடுத்து முடித்தனர். திமிரு என்ற மிகப் பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்த தருண் கோபி இயக்கிய படம் இது.

சிம்புவுக்கு ஜோடியாக வேதிகா நடித்திருந்தார். சங்கீதா கிளாமர் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

வல்லவனுக்குப் பிறகு வரும் சிம்பு படம் என்பதால் காளை குறித்து மிகப் பெறும் எதிர்பார்ப்பு இருந்தது. பொங்கலுக்கு காளை ரிலீஸானது. சிம்புவின் ரசிகர்கள் படு உற்சாகத்தோடு படத்தைப் பார்க்க தியேட்டர்களில் குவிந்தனர்.

ஆனால் ஒவ்வொரு சீனும் போகப் போக ரசிகர்களிடையே பெரும் சீற்றம் ஏற்பட்டு விட்டதாம். காரணம், ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்காத அளவுக்குப் படம் இருந்ததுதான்.

இதை அறிந்த விஜய டி.ராஜேந்தர் சென்னையில் உள்ள தியேட்டர்களுக்குச் சென்று படத்தைப் பார்த்துள்ளார். பார்த்தவர், பிளட் பிரஷர் எகிற கடுப்பாகி விட்டாராம்.

ரசிகர்களின் எதிர்ப்பைக் கண்டு அதிர்ந்தவர், தியேட்டருக்கு தருண் கோபியும் வந்ததைப் பார்த்து அவரை நேருக்கு நேர் நிறுத்தி கடுமையாக திட்டித் தீர்த்து விட்டாராம்.

அடிக்காத குறையாக பேசிய டி.ராஜேந்தரின் கோபத்தைக் கண்டு தருண் கோபி ஆடிப் போய் விட்டாராம்.

எல்லாம் போச்சே என்று புலம்பியபடி சென்ற ராஜேந்தரைப் பார்த்து தியேட்டரில் அனைவரும் வெலவெலத்துப் போய் விட்டார்களாம்.

காளை படப்பிடிப்பின்போதே கோபிக்கும், சிம்புவுக்கும் ஒத்துவரவில்லை என்று கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் வர, சிம்பு, தருண் கோபியை அடித்து விட்டதாகவும் கூட பேசப்பட்டது.

இப்படி இருவரும் ஆளுக்கு ஒரு கோணத்தில் இந்தப் படத்தை உருவாக்கியதால்தான் காளை, பசுவாக மாறி விட்டதாக திரையுலகில் கூறப்படுகிறது.

கொம்பை சரியாக சீவியிருந்தால் காளை சரியாக சீறியிருக்குமோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil