twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அன்றும்… இன்றும்… என்றும்… ஆனந்த யாழை மீட்டும் யுவனின் ஹிட் பாடல்கள் !

    |

    சென்னை : புலிக்கு பிறந்தது பூனை ஆகாது என்பதை இளையராஜாவின் வாரிசான யுவன் சங்கர் ராஜா நிரூபித்துள்ளார். நட்பு , காதல், சோகம், கொண்டாட்டம் என அனைத்தையும் தனக்கான ஸ்டைலில் கொடுத்து மக்கள் மனதில் சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கிறார் யுவுன் என்னும் புதுமை வித்தகன்.

    Recommended Video

    #HBDYUVAN ரசிகர்களுக்கு ஆண் குரலில் ஒரு தாயாய்.. இசையுடன் தோன்றும் யுவன்.. குவியும் பிறந்தநாள் வாழ்த்து

    தன்னுடைய கம்பீரக்குரலால் அனைவரையும் கட்டிப்போடும் வித்தைத் தெரிந்த வித்தகன் என்று சொன்னால் அது மிகையாகாது.

    நடிச்ச படம் ரிலீஸ் ஆகாத வேதனை எனக்கும் நடந்திருக்கு.. மத கஜ ராஜா பற்றி மனம் திறந்த வேம்புலி!நடிச்ச படம் ரிலீஸ் ஆகாத வேதனை எனக்கும் நடந்திருக்கு.. மத கஜ ராஜா பற்றி மனம் திறந்த வேம்புலி!

    யுவன்சங்கர் ராஜா இன்று தனது 42வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நேரத்தில், அவர் இசையால் உச்சம் தொட்டு ஆட்டம் போடவைத்த ஹிட் பாடல்கள் சிலவற்றை பார்க்கலாம்.

    இரவா பகலா குளிரா மழையா

    இயக்குனர் வஸந்த் இயக்கத்தில் சூர்யா ஜோதிகா நடிப்பில் உருவான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இடம் பெற்ற இரவா பகலா குளிரா மழையா பாடலில் அசத்தலோ அசத்தலாக அசத்தி இருப்பார் யுவன்.

    நினைத்து நினைத்து பார்த்தால்

    இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் காதல் இப்படி இருக்கனும் என்று சொல்ல வைத்த 7ஜி ரெயின்போ காலனி படத்தில் பாடல்கள் ஒவ்வொன்றும் ஹிட்டோ ஹிட். குறிப்பாக நினைத்து நினைத்து பார்த்தால்... இன்றும் நினைத்து பார்க்க வைக்கிறது.

    தொட்டு தொட்டு செல்லும் தென்றல்

    தனுஷூன் திரைப்பயணத்தில் திருப்பு முனையை ஏற்படுத்திய படம் காதல் கொண்டேன். இத்திரைப்படம் திரையில் பல நாட்கள் ஓடி தனுஷூற்கு மிகப்பெரிய அளவில் பெயரை பெற்றுத்தந்தது. இந்த திரைப்படத்திற்கு பலமே யுவனின் இசைதான், தொட்டு தொட்டு செல்லும் தென்றல், மனதை லாவகமாக தொட்டு வருடிச் சென்றது.

    விளையாடு மங்காத்தா

    வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படம் யுவன் சங்கர் ராஜா பிறந்தநாளில் வெளியானது. இது அஜித்தின் கேரியரில் 50 வது படம் மற்றும் இன்று வரை அவரது கேரியரில் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக உள்ளது. யுவன் இசையமைத்த விளையாடு மங்காத்தா பாடல், அஜித்தின் ரசிகர்களை உச்சுகொட்ட வைத்தது.

    ஹே பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து

    சித் ஸ்ரீராம் யுவன் சங்கர் இசையில் பியார் பிரேமா காதல் பாடலுக்கு குரல் கொடுத்திருந்தார். இரண்டு பெரிய நட்சத்திரங்கள் இணையும் போது, ஒத்துழைப்பு எப்போதுமே மிகவும் சக்தி வாய்ந்தது இருந்தது. ஹே பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து பாடல் 2018 ஆம் ஆண்டில் அதிகம் கேட்கப்பட்ட பாடல்களில் ஒன்றாக மாறியது. ரைசா மற்றும் ஹரீஸ் கல்யாணுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

    ஆனந்த யாழை மீட்டுகிறாள்

    ராம் இயக்கத்தில் உருவான தங்கமீன் திரைப்படத்தில் இடம் பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறாள் என்ற பாடல். அனைவரும் கேட்டு கேட்டு லாபித்த பாடலாகும். நா முத்துகுமாரி பாடல் வரியில் சித் ஸ்ரீராம் குரலில் அனைவரும் மயங்கிகேட்ட பாடலாகும்.

    படம் ஹிட்டானல் போதும்.

    படம் ஹிட்டானல் போதும்.

    யுவன் சங்கர் ராஜா. இசையின் வழியே உணர்வுகளை கடத்தியிருந்தார். அவரின் 24 ஆண்டுகால இசைப் பயணத்தில் இவரின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. நான் பாட்டு போடுற படம் ஹிட்டாகுதா? அந்தப் பாட்டை மக்கள் ரசிக்கிறார்களா? இவ்வளவு தான் என்னுடைய நோக்கம் என்பதை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு பாடல்கள் இசையமைத்து வருகிறார்.

    English summary
    Yuvan is celebrating his 42nd birthday today. here’s taking a look at popular on screen pairs to feature in composer Yuvan's songs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X