ஜெயஸ்ரீ உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால்.. நான் பொறுப்பல்ல.. நடிகர் ஈஸ்வர் பரபரப்பு புகார்

சென்னை: சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ இன்னொரு நபருடன் வாழ்ந்து வருவதால் அவரை பிரிவதாக நடிகர் ஈஸ்வர் தொடர்ந்த விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ஜெயஸ்ரீக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் அவருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கு தான் பொறுப்பல்ல என்று அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

கள்ளத் தொடர்பு

கள்ளத் தொடர்பு

தேவதையை கண்டேன் சீரியல் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகர் ஈஸ்வருக்கும் மகாலட்சுமிக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. அதே போல ஈஸ்வரின் மனைவி சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீக்கும் ராகவேஷ் என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக பெரும் சர்ச்சை கிளம்பியது.

விவாகரத்து வழக்கு

விவாகரத்து வழக்கு

கடந்த 2019ம் ஆண்டு கணவர் ஈஸ்வர் கொடுமை கொடுப்பதாக ஜெயஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில் ஈஸ்வர் கைது செய்யப்பட்ட நிலையில், இருவரும் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பு புகார்

பரபரப்பு புகார்

திருவான்மியூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நடிகர் ஈஸ்வர் தற்போது காவல் நிலையத்தில் திடீரென புகார் ஒன்றை அளித்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது. அதில், தனது மனைவி ஜெயஸ்ரீயின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் தான் பொறுப்பாக மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கார் ஏற்றி கொல்வதாக

கார் ஏற்றி கொல்வதாக

நடிகை ஜெயஸ்ரீ ராகவேஷ் என்பவரை காதலித்து அவருடனே வசித்து வருகிறார். ஆனால், அது ராகவேஷின் தந்தையும் சினிமா தயாரிப்பாளருமான சண்முகத்திற்கு பிடிக்கவில்லை. அவர் என்னிடம் வந்து ஜெயஸ்ரீ தனது மகனை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்றும் அப்படி செய்யவில்லை என்றால் ஜெயஸ்ரீயை கார் ஏற்றி கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளதாக அந்த புகார் மனுவில் திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.

பழி வரக்கூடாது

பழி வரக்கூடாது

பணத்திற்காக பலரிடம் பழகி வரும் ஜெயஸ்ரீயின் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் அந்த பழி என் மீது விழக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த புகாரை நடிகர் ஈஸ்வர் அளித்துள்ளது சின்னத்திரை உலகத்தில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில்

நடிகர் ஈஸ்வர் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளப் போகிறார் என முன்னதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கடைசியில் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை வைல்டு கார்டு என்ட்ரியாக யாரும் கலந்து கொள்ளாத நிலையில், ஈஸ்வர் உள்ளே வருவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில், நடிகர் ஈஸ்வர் இப்படியொரு சிக்கலில் சிக்கி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X