twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருக்குறளை பேஸ் பண்ணிதான் கதையே இருக்கு - இரு துருவம் நந்தா பேட்டி

    |

    சென்னை: இருதுருவம் வெப்சீரிஸில் திருக்குறளை பேஸ் பண்ணி அந்த கொலை சம்பவத்துல என்ன நடக்குதுங்குறதை சொல்லியிருக்கோம். அதே மாதிரி அந்த க்ரைம் நடந்த பின்னாடி அந்த சீரியல் கில்லர் ஒரு தடயத்தையும் விட்டுட்டு போவார். அதுவும் ஒரு திருக்குறளை பேஸ் பண்ணி தான் இருக்கும் என்று கூறியுள்ளார் நடிகர் நந்தா. திருக்குறளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இரு துருவம் என்ற வெப் சீரியலில் நடிக்கும் நடிகர் நந்தா தன்னுடைய சினிமா மற்றும் வெப் சீரிஸ் அனுபவங்களை நம்முடைய ஃபிலிமிபீட் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

    நடிகர் நந்தா தி.மு.க முன்னாள் அமைச்சரின் பேரனாவர். நந்தாவிற்கு சொந்த ஊரான கோவையில் ஏகப்பட்ட தொழில் நிறுவனங்கள் இருந்தாலும் கூட, நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தினால் தான் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். நடிகர் சூர்யா முன்னணி நடிகராக வளர்ந்து வரும் காலகட்டத்தில் அவருடன் மவுனம் பேசியதே என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நந்தா. அந்த படத்திற்கு பிறகு கோடம்பாக்கம், புன்னகை பூவே, அகரம், ஈரம், ஆனந்தபுரத்து வீடு, வந்தான் வென்றான் என சில படங்களில் நடித்துள்ளார்.

    Actor Nandha special interview

    ஆனந்தபுரத்து வீடு படத்தில் இவருடைய நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. தனது பெற்றோர் வாழ்ந்த வீட்டை கடன்காரனிடம் இருந்து மீட்க போராடும் ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்து இளைஞனாக தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அந்த படத்திற்கு பிறகு, படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கனார். கடந்த ஆண்டு சூர்யா நடித்து வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் நந்தா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

    இந்த படத்திற்கு பிறகு தற்போது இரு துருவம் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இரு துருவம் வெப் சீரிஸில் நடிப்பது குறித்து பேசிய அவர், ஈரம் படத்திற்கு பின்பு எனக்கு பெயர் சொல்லும் படைப்பாக இது இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த கதையை இயக்குநர் குமரன் எனக்கு சொன்னபோதே, நாம் ஏன் இதை படமாக எடுக்க கூடாது என்று கேட்டதற்கு அவர் பிடிவாதமாக, வெப் சீரிஸ் உருவாக்குவதில் பிடிவாதமாக இருந்தார்.

    இரு துருவம் வெப் சீரிஸில் என்னுடைய கேரக்டரை குறிப்பிட்டிருந்த விதம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அதனால் என்னுடைய கதாபாத்திரத்தை அதற்கு தக்கவாறு வடிவமைத்துக்கொள்ள முடிந்தது என்றார். அதோடு, நான் ஏற்கனவே, வேலூர் மாவட்டம், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்கள்ல போலீஸ் கெட்டப் போட்டிருக்கேன். போலீஸ் ட்ரெஸ் போட்டாலே தானாவே ஒரு கெத்து வந்துடும்.

    சாதிக்கு எதிராக இப்படி ஒரு படம் வந்தது இல்லை.. அசுரனை புகழும் விடுதலை சிறுத்தைகள் கட்சி!சாதிக்கு எதிராக இப்படி ஒரு படம் வந்தது இல்லை.. அசுரனை புகழும் விடுதலை சிறுத்தைகள் கட்சி!

    இப்போதைக்கு ட்ரெண்டு என்னன்னா, தமிழை எப்படி திணிக்கலாம், தமிழ் மொழியை பத்தியோ, தமிழ் கலாச்சாரத்தை பத்தியோ படத்துல எப்படி திணிச்சி சொல்லி, பேர் வாங்கலாம்னு இல்லாம, இந்த வெப் சீரிஸோட மொத்த கதையே திருக்குறளை பேஸ் பண்ணிதான் இருக்கு.

    இதுல தமிழை திணிச்சது மாதிரி இல்லாம, இதுல நடக்குற ஒவ்வொரு க்ரைமும் ஒரு திருக்குறளை பேஸ் பண்ணி தான் நடக்குது. திருக்குறளை பேஸ் பண்ணி அந்த கொலை சம்பவத்துல என்ன நடக்குதுங்குறதை சொல்லியிருக்கோம். அதே மாதிரி அந்த க்ரைம் நடந்த பின்னாடி அந்த சீரியல் கில்லர் ஒரு தடயத்தையும் விட்டுட்டு போவார். அதுவும் ஒரு திருக்குறளை பேஸ் பண்ணி தான் இருக்கும்.

    அந்த க்ளு தான் எனக்கு ஒரு லீடா இருக்கும். இதுல அந்த குறளைப் பத்தின விளக்கமும் அதுல இருக்கும். இதுல என்ன முக்கிய அம்சம்னா. திருக்குறளை வேணும்னே திணிக்காம, இந்த மாதிரி சொன்னா மக்கள் கிட்டே நல்ல ரீச் ஆகும். திருக்குறளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர்றதுக்கு காரணம், டைரக்டர் குமரன் திருக்குறளுக்கு பெரிய ஃபேன். அதனால் இந்த மாதிரி ஒரு சீரியல் எடுக்க முன்வந்திருக்கார்.

    டைரக்டர் குமரனை பத்தி சொல்லணும்னா, எந்த அதிகாரத்துல இருந்தும் ஒரு திருக்குறளை சொல்ல சொன்னாலும் டக்குனு சொல்வார். எந்த அதிகாரத்துல எந்த குறளை கேட்டாலும் யோசிக்காம சொல்லி அதுக்கு விளக்கமும் தருவார். அதனால தான், இந்த சீரியலை எடுக்க முன்வந்திருக்கார் என்றார் நந்தா.

    English summary
    Actor Nanda, who is in the web serial 'Iru Dhuravam' based in Tirukkurali, recently, met Udayanidhi Stalin. It was rumored that he would be given a prominent position in the DMK's youth wing. In this situation, Nanda shared her cinematic and political experiences with our FilmiBeat readers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X