Don't Miss!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
செயற்கை வைரங்களை உருவாக்க புதிய திட்டம்.. சுங்க வரியும் குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அட.. இவருமா.. பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்கும் சார்பட்டா பரம்பரை நடிகர்.. தீயாய் பரவும் தகவல்!
சென்னை: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபல நடிகர் குறித்த தகவல் தீயாய் பரவி வருகிறது.
விஜய் டிவியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 4 சீசன்கள் நிறைவடைந்துள்ளது.
சூப்பர் ஹிட் ஹிந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
இதில் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன் ராவ், நான்காவது சீசனில் ஆரி அர்ஜூனன் ஆகியோர் டைட்டில் வென்றனர்.

இதுவரை 3 புரமோக்கள்
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி தொடங்கும் என கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக இதுவரை மூன்று புரமோக்கள் வெளியாகியுள்ளது.

வீடும் பெருசு, கலாட்டாவும் பெருசு
பிக்பாஸ் லோகோவுக்கான ஒரு புரமோவும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இரண்டு புரமோவும் வெளியாகியுள்ளது. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் புரமோ கல்யாண வீட்டில் நடக்கும் கலாட்டாக்களை மைய்யப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. ஆயிரம் பொருத்தம் பார்க்கும் கல்யாண வீட்டிலேயே இத்தனை பிரச்சனை இருக்கு என கூறிய கமல் இங்கே வீடும் பெருசு, கலாட்டாவும் பெருசு என்று கூறியிருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு
இதனை தொடர்ந்து இரண்டாவது புரமோ வெளியானது. அதில் சமையல் செய்யும் கமல் தாளிச்சு கொட்டுவதையும் கடுகு பொறிவதையும் வைத்து பிக்பாஸ் வீட்டோடு தொடர்பு படுத்தி பேசியிருந்தார் கமல். இந்த இரண்டு புரமோக்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சார்பட்டா பரம்பரை நடிகர்
தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் குறித்த தகவல் பரவி வருகிறது. அதன்படி ஆர்ஜே வினோத், நடிகை சூசன், நடிகர் அபினய், டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து என பலரின் பெயர்களும் அடிபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சார்பட்டா பரம்பரை நடிகரின் பெயரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக அடிபட்டு வருகிறது.

நடிகர் சந்தோஷ் பிரதாப்
அதன்படி சார்பட்டா பரம்பரை படத்தில் ராமன் கதாப்பாத்திரத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்தவர் நடித்த சந்தோஷ் பிரதாப். சந்தோஷ் பிரதாப் ஏற்கனவே கதை திரைக்கதை வசனம் இயக்கம், தாயம், பயமா இருக்கு, பஞ்சராக்ஷரம், ஓமை கடவுளே, இரும்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்பு
ஆனால் சார்பட்டா பரம்பரை படம் அவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் சந்தோஷ் பிரதாப் கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை சந்தோஷ் பிரதாப தரப்பில் இருந்து யாரும் உறுதிப்படுத்தவில்லை.