Don't Miss!
- News
தந்தையின் குடிப்பழக்கம், பாலின பாகுபாடு.. கல்வியை இழந்த 30 வயது பெண்ணின் கதை.. டாக்டர் பரூக்
- Sports
அடப்பாவமே.. ரோகித் சர்மாவுக்கு 35 வயதிலா இந்த இக்கட்டான நிலைமை??.. ஆஸி, தொடரில் நிரூபித்தே தீரணும்!
- Automobiles
இதுதான் ஸியோமி எலெக்ட்ரிக் கார்... இணையத்தில் வெளியாகிய படங்கள்! வேற லெவல்ல இருக்கு.. ஆனா எங்கேயோ உதைக்குது!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க காதலில் எப்போதும் விட்டுக்கொடுப்பவராக இருப்பார்களாம்... இவங்கள காதலிச்சா பிரச்சினையே இல்ல!
- Technology
Jio-வில் இப்படி இலவசங்கள் கூட இருக்கா? அடடா.. இது தெரியாம போச்சே.! இனி மிஸ் பண்ணிடாதீங்க.!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பாக்கியலட்சுமி தொடர்ல அடுத்த மூணு வாரம் இப்படித்தான் இருக்கப்போகுது.. நவரசங்களை பார்க்க தயாராகுங்க!
சென்னை : விஜய் டிவியின் பிரபல மற்றும் முன்னணி தொடரான பாக்கிலட்சுமி அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.
இந்தத் தொடரில் ராதிகாவின் கணவர் பாக்கியலட்சுமி வீட்டிற்கு சென்று உண்மையை போட்டுடைக்கிறார்.
குடும்பப்
பிணைப்பை
சொல்லும்
பச்சைக்கிளி
தொடர்..
இன்னும்
3
நாள்ல
துவக்கம்..
எந்த
சேனல்ல
தெரியுமா?
இதுகுறித்து கேள்விப்படும் கோபி, வண்டியை வேகமாக ஓட்டிக் கொண்டு வந்து விபத்துக்குள்ளாகிறார்.

பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடராக பாக்கியலட்சுமி இருந்து வருகிறது. இந்தத் தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான சம்பவங்களை அரங்கேற்றி வருகிறார் இயக்குநர். தற்போது சீரியல் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. காதலியை கைப்பிடிக்க போராடிவரும் கோபியின் குட்டு தற்போது குடும்பத்தினரிடையே வெளிப்பட்டுள்ளது.

மும்பை செல்ல திட்டம்
ராதிகாவிற்கு முன்னதாக இந்த விஷயம் தெரியவந்த நிலையில், அவர் கோபியை ஏற்க முடியாது என்று உறுதியாக கூறிவிட்டு, தன்னுடைய மகளுடன் மும்பை செல்ல திட்டமிட்டிருந்தார். இதனிடையே, இவர்களின் காதல் மற்றும் திருமணத் திட்டத்தை ராதிகாவின் கணவர், பாக்கியலட்சுமி குடும்பத்தினரிடையே கோபத்துடன் வெளிப்படுத்துகிறார்.

உண்மையை உடைக்கும் ராதிகா கணவர்
மேலும் இனியனிடமும் கோபி ராதிகாவை திருமணம் செய்யவுள்ளதையும், பாக்கியாவை டைவர்ஸ் செய்யவுள்ளதையும் வீடியோ ஆதாரத்துடன் கூறுகிறார். தொடர்ந்து கோபியின் அப்பா, தன்னுடைய மனைவியிடம், கோபி ஒன்றும் யோக்கியன் கிடையாது என்று உண்மையை உடைக்கிறார்.

கோபிக்கு விபத்து
தொடர்ந்து அவர் தன்னுடைய மகனை உடனடியாக வீட்டிற்கு வருமாறு போனில் கோபத்துடன் கூறுகிறார். இதையடுத்து நடந்த உண்மையை யூகிக்கும் கோபி, டென்ஷனுடன் காரை ஓட்டிச் சென்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

சதீஷ் புதிய வீடியோ
இதையடுத்து விஷயத்தை கேள்விப்பட்டு ராதிகா மற்றும் பாக்கியலட்சுமி இருவரும் மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்கள் இருவரின் சந்திப்பு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அடுத்தடுத்த எபிசோட்களில் பார்க்கலாம். இதனிடையே தற்போது கோபி கேரக்டரில் நடித்துள்ள சதீஷ் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

தொடரில் நவரசங்கள்
இதில் அடுத்த மூன்று வாரங்களுக்கு இந்த தொடர் இப்படிதான் இருக்கப் போகிறது என்று கூறியுள்ளார். நவரசங்களுடன் தொடர் பரபரப்பான திருப்பங்களை ரசிகர்களுக்கு கொடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ரசிகர்கள் தன்னுடைய கேரக்டருக்கு கொடுத்துவரும் விமர்சனங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

கோபியின் திட்டம்
சதீஷ் இந்தத் தொடரில் கோபி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். திருமணமான மகனை வைத்துள்ள இவர், ராதிகாவுடனான தன்னுடைய காதலுக்காக தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்யும் முடிவை எடுத்து அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டார். அப்பாவியான பாக்கியலட்சுமியை ஏமாற்றும் பல வேலைகளை செய்தார்.

திட்டு வாங்கிய சதீஷ்
இதனால் இது சீரியலின் ஒரு கேரக்டர் என்பதைக்கூட அறியாமல் ரசிகர்கள் அவரை தொடர்ந்து சமூக வலைதளங்களில் திட்டி வந்தனர். ஒரு கட்டத்தில் இதை தாங்காமல், மன வருத்தத்துடன் அவர் வீடியோ வெளியிட்டிருந்தார். என்னை திட்டாதீர்கள் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.