»   »  வேலன் தொடங்கி வள்ளி வரை... நடிகை ஜோதிலட்சுமியின் சீரியல் பயணங்கள்

வேலன் தொடங்கி வள்ளி வரை... நடிகை ஜோதிலட்சுமியின் சீரியல் பயணங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களை சந்தோசப்படுத்தி பார்ப்பதுதான் பெரிய சந்தோசம்... அதை விட முடியுமா என்று கேட்டவர் நடிகை ஜோதிலட்சுமி. 1963ல் தொடங்கி 2016 வரை சினிமா, சின்னத்திரை என மரணம் வரைக்கும் நடித்து ரசிகர்களை சந்தோசப்படுத்தியுள்ளார்.

கறுப்பு வெள்ளை காலங்களில் தனது கவர்ச்சியான நடனத்தால் தமிழ் சினிமா ரசிகர்களை ஒரு கலக்கு கலக்கியவர். எம்.ஜி.ஆர் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த ஜோதிலட்சுமி 300 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

வயதானதால் கவர்ச்சி நடனத்தை குறைத்துக்கொண்டு நடிப்பில் கவனம் செலுத்தினார். சன் டிவியில் சரிகம நிறுவனம் தயாரித்த வேலன் டிவி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் ஜோதிலட்சுமி.

டெரர் தோற்றம்

டெரர் தோற்றம்

சினிமாவில் கவர்ச்சியாக நடித்த ஜோதி லட்சுமி, வேலன் சீரியலில் டெரரான தோற்றத்தில் சூனியக்கார கிழவியாக நடித்திருந்தார்.

அண்ணாமலை சீரியல்

அண்ணாமலை சீரியல்

ராதிகாவின் அண்ணாமலை சீரியலில் பணக்கார குடும்பத்து பெண்மணியாக நடித்திருந்தார். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

பெண் மந்திரவாதி

பெண் மந்திரவாதி

ராஜ ராஜேஸ்வரி, சூலம், உள்ளிட்ட பல சீரியல்களில் பெண் மந்திரவாதி தோற்றத்தில் நடித்துள்ளார் ஜோதிலட்சுமி. எல்லாமே வில்லத்தனமாக கதாபாத்திரங்கள்தான்.

வள்ளி பாட்டி

வள்ளி பாட்டி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சன் டிவியின் சரிகம நிறுவனம் தயாரித்துள்ள வள்ளி சீரியலில் கடந்த சில மாதங்களாக நடித்து வருகிறார். சரிகம நிறுவனம் என்பதால் நடிக்க ஒத்துக்கொண்டேன் என்று கூறிய ஜோதிலட்சுமி. மக்களை சந்தோசப்படுத்தி பார்ப்பதற்காக மீண்டும் நடிக்க வந்ததாக கூறினார்.

மூத்த கலைஞர்கள் மரணம்

மூத்த கலைஞர்கள் மரணம்

சரிகம நிறுவனத்தின் டிவி சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்த வியட்நாம் வீடு சுந்தரம் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தார். இந்தநிலையில் அதே நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த நடிகையாக ஜோதிலட்சுமியும் மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Jyothilakshmi played many TV serials from Velan to Valli.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil