எல்லாமே வதந்தி.. எதையும் நம்பாதீங்க.. மகாநதி சீரியல் நடிகை விளக்கம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரான, மகாநதி சீரியல் உள்ளது. கனா காணும் காலங்கள், ராஜா ராணி, ராஜா ராணி 2, பாரதி கண்ணம்மா, போன்ற பல ஹிட் சீரியல்களை இயக்கி புகழ்பெற்றவர் பிரவீன் பென்டன்ட் இந்த சீரியலை இயக்கி வருகிறார். இந்த சீரியலில் லீட் ரோலில் நடித்து வரும் லட்சுமி பிரியா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதுகுறித்து பகிர்ந்துள்ளார்
'மகாநதி' சீரியலில் ஹீரோயினாக லட்சுமி பிரியா காவிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சுவாமிநாதன், தாரணி ஹெப்ஸிபா, கம்ருதீன், ஆதிரை சௌந்தர்ராஜன், ருத்ரன் பிரவீன், பேபி காவியா, சுஜாதா போன்ற பலர் நடித்து வருகின்றனர். ஊட்டியில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த ஒரு குடும்பம், தந்தை மறைவுக்கு பின், சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வருகின்றனர். தன்னுடைய தங்கை உயிரை காப்பாற்றுவதற்காக வாங்கிய பணம் தொலைந்து போக, ஹீரோயினான லட்சுமி பிரியா, அக்ரீமெண்ட் போட்டு கதாநாயகன் விஜயை திருமணம் செய்து கொள்கிறாள். ஒரு கட்டத்தில் காவிரி மற்றும் விஜய் இருவரும் காதலிக்க தொடங்கி, கணவன் மனைவியாக வாழ ஆரம்பிக்கின்றனர். இவர்களின் காதலுக்கு அடையாளமாக தற்போது காவேரி கர்ப்பமாக உள்ளார்.

மகாநதி சீரியல்: இந்த சீரியலில் நடிகையாக நடித்த லட்சுமி பிரியா, அண்மையில் வெளியான காத்துவாக்குல ஒரு காதல் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்தை மாஸ் ரவி எழுதி இயக்கி நடித்திருந்தார். மேலும், சாய் தீனா, சூப்பர்சூ சூப்பராயன், தங்கதுரை, பல்லவி, கல்லூரி வினோத், பாஸ்கர், பவர் ஸ்டார், மேனாக்ஸா, மிப்பு, மொசக்குட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிகேவி இசையமைத்துள்ளார். தியேட்டரில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
எல்லாமே வதந்தி: இந்நிலையில், லட்சுமி பிரியா மகாநதி சீரியலில் இருந்து விலகி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து நடிகை லட்சுமி பிரியா, தனது instagram பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் எந்த ஒரு ஆடிஷனுக்கும் செல்லவில்லை, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு எனக்கு எந்த ஒரு அழைப்பும் வரவில்லை என பதிவிட்டுள்ளார். இதனால், இணையத்தில் இவர் குறித்து பரவி வந்த வதந்திக்கு லட்சுமி பிரியா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











