சிம்ரன் கூட இப்படி ஆடலையேப்பா... சீரியல் நடிகருடன் ரவீணா செம ஆட்டம்

சென்னை : விஜய் டிவியில் செம பிரபலமாக ஓடிய சீரியல்களில் ஒன்று மெளன ராகம். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து மெளன ராகம் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது.

Recommended Video

கமல் ஹீரோயின் கோவிலுக்குள் செய்த காரியம்!- வீடியோ

மெளன ராகம் 2 சில மாதங்களுக்கு முன் துவங்கி விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்தில் அனைவரையும் கவர்ந்த குழந்தை சக்தி கேரக்டர் வளர்ந்து இளம் பெண்ணாக மாறிய பிறகு நடப்பது தான் இரண்டாம் பாகத்தின் கதை.

Actress Raveena Daha latest dance video goes viral

தன் அம்மாவின் உயிரை காப்பாற்றுவதற்காக பணக்கார வீட்டு பையனை திருமணம் செய்து கொள்கிறாள் சக்தி. சத்தியாவாக இருப்பது தனது மகள் சக்தி தான் என்ற உண்மையை கார்த்திக் கிருஷ்ணா தெரிந்து கொள்கிறார். தனக்கு தெரியாமல் மகள் சக்திக்கு திருமணமானதை தெரிந்து கொண்ட மல்லிகா, சக்தியை பிரிந்து செல்கிறாள். இப்படி அடுத்தடுத்த திருப்பங்களுடன், விறுவிறுப்பாக செல்கிறது மெளனராகம் 2 சீரியல். இதில் குமரியான சக்தி கேரக்டரில் நடித்து வருகிறார் ரவீணா தாஹா.

இவர், சன்டிவி.,யில் 2009 ல் ஒளிபரப்பான தங்கம் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அப்போது அவருக்கு வயது நான்கரை தான். அதைத் தொடர்ந்து வசந்தம், பவானி, சாந்தி நிலையம், வள்ளி, பைரவி, 63 நாயன்மார்கள், ராமானுஜர், சந்திரலேகா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார்.

கத சொல்ல போறேன் படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார் ரவீணா. அதற்கு பிறகு ஜில்லா, ஜீவா, பூஜை, புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம், ராட்சசன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ராட்சசன் படத்தின் தெலுங்கு வெர்சனான ராட்சசடு படத்திலும் இவர் தான் நடித்தார்.

தற்போது மெளன ராகம் 2 சீரியலில் வருண் கேரக்டரில் நடிக்கும் சல்மானுல் ஃபரிஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து அடிக்கடி ஏதாவது ஒரு பாடலுக்கு நடிக்கும் ரீல் வீடியோக்கள், தனது நடன மற்றும் நடிப்பு திறமையை காட்டும் ரீல் வீடியோக்கள், கிளாமர் ஃபோட்டோக்கள் போன்றவற்றை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் ரவீணா.

இந்நிலையில் லேட்டஸ்டாக, எதிரும் புதிரும் படத்தில் இடம்பெற்ற தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு செம கலக்கலாக ரவீணாவும், சல்சானுலும் நடனம் ஆடி உள்ளனர். படத்தில் இந்த பாடலுக்கு சிம்ரனும், ராஜு சுந்தரமும் நடனம் ஆடி இருப்பார்கள். ஆனால் சிம்ரனையே மிஞ்சும் அளவிற்கு ரவீணா நடனமாடி அசத்தி உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X