For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Arundhathi serial: ஆடி வெள்ளியில் முருகனுக்கு தீச்சட்டி காவடி...இது கூட நல்லாருக்கே!

By Siva
|

சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலில் சண்முகத்தின் மனைவி தெய்வானை ஆடி வெள்ளியான இன்று தமிழ் கடவுள் முருகனுக்கு வேண்டிக்கொண்டு, தீச்சட்டி ஏந்தி, காவடி எடுக்கிறாள்.

தினமும் கந்தர் சஷ்டி கவசம் படித்தால், பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல் நம்மை அண்டாது என்பது தமிழர்களின் வழி வழிமுறை ஆன்மீக வழக்கம் நம்பிக்கை. அதை கடைப்பிடிக்கும் மக்கள் இன்றும் இருக்கிறார்கள்.

கந்தா, கடம்பா, கதிர்வேலா, சண்முகா, வடிவேலா, கார்த்திகேயா, வேல்முருகா என்று அழகன் முருகனுக்குத்தான் இன்னும் எத்தனை எத்தனை பெயர்கள். ஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமல்ல, செல்வகுமரனுக்கும் உகந்த நாளே. அதனால்தான் ஆடிக் கிருத்திகையை பக்தர்கள் அமோகமாக கொண்டாடுகிறார்கள்.

சண்முகம் அருந்ததி

சண்முகம் அருந்ததி

அருந்ததி ஜாமீன் குடும்பத்தினரின் சிலைக்கு கடத்தலைக் கண்டதால், அந்த வீட்டு ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு, அநியாயமாக அவளை கிணற்றில் தள்ளி கொன்றும் விட்டார்கள். அவளின் ஆவியை சண்முகம் அமெரிக்காவில் இருந்து வந்த கையோடு, கிணற்றில் இருந்து தன்னை அறியாமல் மந்திரக் கட்டுக்களை அவிழ்த்து வெளியில் வரவைத்து விடுகிறான். அருந்ததி ஆவி வெளியில் வந்து, ஈஸ்வரி அம்மாவின் குடும்பத்தில் உள்ள ஆண்களை கொல்ல துடிக்கிறது.

சண்முகம் தெய்வானை

சண்முகம் தெய்வானை

அருந்ததியின் ஆவி முதலில் சண்முகத்தின் உடலில் புகுந்து, குடும்பத்தையும், மனைவியாகிவிட்ட அருந்ததியையும் பாடாய்ப் படுத்துகிறது. சண்முகத்தின் உடலில் அருந்ததி ஆவி புகுந்து உள்ளது என்பதை தெய்வானைதான் கண்டுபிடிக்கிறாள். இடையில் கோவை சரளா அண்ட் கோ வந்து, சில காமெடிகளை செய்தது ரசிக்கும்படி இல்லை.என்றாலும்,கோவை சரளாவின் உதவியோடுதான் அருந்ததி ஆவி, சண்முகத்தின் உடலில் இருப்பதை தெய்வானை கண்டு பிடிக்கிறாள்.

அருந்ததி தெய்வானை

அருந்ததி தெய்வானை

அருந்தியுடன் தெய்வானை தனது பக்தி சக்தியின் மூலம் பேச முடிகிறது.அருந்ததியின் கதையைக் கேட்ட தெய்வானை, நீ தேடி வந்த ஆளை எடுத்துக்கோ, என் புருஷனை நான் காப்பாத்தியே தீருவேன். ஒரு பெண்ணாக உனக்கு நேர்ந்த கொடுமைகளை நானும் உணர்கிறேன் என்று ஒரு உடன்படிக்கைக்கு வந்துவிடுகிறாள். சண்முகத்தின் உடலை விட்டு வெளியில் போன அருந்ததி, ஆவியாகவே தற்போது அலைந்துக் கொண்டு இருக்கிறாள், என்றாலும், புருஷன் தன்னை மறந்த மயக்கத்திலேயே மணிக்கணக்கில் கிடக்கிறான்.

காக்க கனகவேல் காக்க!

காக்க கனகவேல் காக்க!

புருஷன் சண்முகத்தை காக்க, நடு நிசி நேரத்தில் மஞ்சள் புடவை உடுத்தி, கையில் தீச்சட்டி, தோளில் காவடி என்று புறப்பட்டதோடு, புருஷனையும் தன் பதிவிரத பக்தை காரணத்தால், தனியாகவே தூக்கி வந்து, அவனைச் சுற்றி வந்து விரதம் இருக்கிறாள். தன் நிலை மறந்த நிலையில், மனமுருக அவள் மனம் முழுவதும் முருகனே நிறைந்து இருக்க அவள் வேண்டுதல் நடந்து கொண்டு இருக்கிறது.

கந்தர் சஷ்டி கவசம்

கந்தர் சஷ்டி கவசம்

சண்முகத்துக்காக மனைவி தெய்வானை ஒரு புறம் இப்படி வேண்டுதலில் ஈடுபட்டு கொண்டு இருக்க, தாய் ஈஸ்வரி அம்மா, தன் பங்குக்கு தானும் கந்தர் சஷ்டி கவசம் படிக்கப் போவதாக சொல்கிறார். இதனால் என்ன நேர்ந்துவிடப் போகிறது என்று கதிர்வேல் கேட்கும் போது, கந்தர் சஷ்டி கவசம் மகிமை பத்தி உனக்குத் தெரியாதா? கந்தர் சஷ்டி கவசத்தை எழுதியது பால தேவராய சுவாமிகள். அவர் கடுமையான வயிற்று வலியால் துடித்துக் கொண்டு இருந்தபோது, திருச்செந்தூர் முருகனை தரிசித்து, தவம் இருந்துவிட்டு, பின்னர் கடலில் உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்று தவத்தில் உட்காருகிறார்.

அப்போது முருகன் காட்சி தந்து கந்தர் சஷ்டி கவசம் எழுதும் புத்தியைத் தந்து, அதை அவர் தொடர்ந்து படிப்பதன் மூலம் அவரின் வயிற்று வலியையும் போகச் செய்தார் என்று சொல்கிறார்கள்.

English summary
Sun TV's Arundhati Serial has teamed up with Shanmugam's wife, Devan, today to pray to the God of Tamil Lord Murugan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more