»   »  சன் டிவியில் அமலாபால்... டான்ஸ் நிகழ்ச்சியில் உற்சாக நடுவர்!!

சன் டிவியில் அமலாபால்... டான்ஸ் நிகழ்ச்சியில் உற்சாக நடுவர்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லாவிட்டாலோ, திருமணமாகி விட்டாலோ நடிகைகள் டிவி சீரியல்களிலோ, ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தலைகாட்டுவார்கள். நடிகை அமலாபாலும் அதற்கு விதிவிலக்கல்ல.

மைனா படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை அமலாபால். இவர் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டு தமிழ்நாட்டு மருமகளானார். திருமணத்திற்கு முன்பு ஒத்துக்கொண்ட படங்களை நடித்து கொடுத்த அவர் தற்போது வேறு எந்த புது படங்களிலும் நடிக்கவில்லை.

வீட்டில் சும்மா இருக்க போரடிக்கவே, சன்டிவியின் டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். குஷ்பு, மீனா, சங்கீதா, ராதா, அம்பிகா வரிசையில் நடுவராகிவிட்டார் அமலாபால்.

நடன நிகழ்ச்சியில் அமலாபால்

நடன நிகழ்ச்சியில் அமலாபால்

சன்டிவியில் ஒளிபரப்பாகும் நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக வரும் அமலாபால் உடன் நடிகர் சிவாவும் மற்றொரு நடுவராக பங்கேற்கிறார். அழகான நடுவரைப் பார்த்தா ஆடாத கால்கள் எல்லாம் தானாக ஆடத்தானே செய்யும் என்கின்றனர் போட்டியாளர்கள்.

அழகா இருக்கேனா

நடன நிகழ்ச்சியில் பங்கேற்பது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமலா பால். தனது பப்ளியான புகைப்படத்தைப் போட்டு இது எப்படி இருக்கு என்று கேட்டுள்ளார்.

போட்டியாளர்களுடன் நடனம்

போட்டியாளர்களுடன் நடனம்

நடுவராக வந்தாலும் அமைதியாக உட்கார்ந்து கருத்து மட்டும் சொல்லாமல், போட்டியாளர்களுடன் இணைந்து நடனமும் ஆடுகிறார். ஆரம்பத்தில் புடவை கட்டி குடும்பபாங்கினியாய் வந்த அமலாபால், அடுத்தடுத்த எபிசோடுகளில் மாடர்ன் டிரஸ் மங்காத்தாவாக வந்து கலக்குகிறார்.

தீபக் உடன் செல்ஃபி

இந்த நடன ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் தீபக் தொகுப்பாளர் தீபக், நடுவர் அமலா பால் உடன் செல்ஃபி எடுத்து அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

English summary
Beauty Amala Paul is getting ready for her television entry. Every Sunday evening at 5 pm, aired on Sun TV in

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil