Don't Miss!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
செயற்கை வைரங்களை உருவாக்க புதிய திட்டம்.. சுங்க வரியும் குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
காத்து வாக்குல ரெண்டு காதல் செய்த அமீர்... மற்றொரு பெண்ணுக்கு பிரபோஸ்... முகம் வாடிய பாவனி!
சென்னை : அமீர் மற்றும் பாவனியின் காதல் பிக் பாஸ் சீசன் 5ல் துவங்கியது. ஆனால் இன்னும் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே போகிறது. இந்நிலையில் இந்த ஜோடி மீண்டும் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் இணைந்துள்ளது. இந்த சீசனில் இவர்கள்தான் ஹைலைட்டாக இருப்பார்கள் என்பதை நிரூபிக்கும்வகையில் பிரமோக்கள் காணப்படுகின்றன.
வில்லனாக
எம்ஜிஆர்
நடித்த
நினைத்ததை
முடிப்பவன்...47
ஆண்டு
கால
ரீவைண்ட்

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி
அமீர் மற்றும் பாவனி இருவரும் கடந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அந்த சீசனே களைகட்டும் வகையில் இவர்களது காதல் கிசுகிசுக்கப்பட்டது. தொடர்ந்து பாவனியிடம் காதல் கோரிக்கையை அமீர் வைத்து வந்தார். ஆனால் தற்போது வரை தன்னுடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளார் பாவனி.

தனியாக இன்ஸ்டாகிராம் பக்கம்
இவர்கள் இருவரை வைத்து தனியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தை துவக்கும் அளவிற்கு இவர்களது காதல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். இந்நிலையில் இவர்கள் இருவரும் விரைவில் இணை வேண்டும் என்றும் ரசிகர்கள் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றன. இந்நிலையில் இந்த ஜோடி தற்போது பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் மீண்டும் இணைந்துள்ளது.

பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2
நேற்றைய தினம் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை ராஜூ மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கவுள்ளனர். நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் செயல்பட உள்ளனர். இதையொட்டி அடுத்தடுத்த ப்ரமோக்களை விஜய் டிவி தொடர்ந்து வெளியிட்டது.

ராக்கி கட்ட தயாரான பாவனி
இதில் ஒரு ப்ரமோவில் இவர்கள் இருவருக்குள் எப்போது திருமணம் என்று பிரியங்கா கேட்ட நிலையில், அதற்கு தான் அமீருக்கு பிரண்ட்ஷிப் பேண்ட் கட்டவுள்ளதாக பாவனி தெரிவித்திருந்தார். முன்னதாக ராக்கி கட்டப் போவதாக கூறி அதிர்ச்சியும் அளித்தார். பாவனி மனதில் என்ன இருக்கிறது என்பது தெரியாது என்று அமீர் தெரிவித்திருந்தார்.

லாஸ்லியாவிற்கு லவ் பிரபோஸ்
இதனிடையே விஜய் டிவி வெளியிட்டுள்ள அடுத்த ப்ரமோவில், பாவனி முன்னதாக நடிகை லாஸ்லியாவிற்கு அமீர் காதல் ப்ரபோஸ் செய்கிறார். தான் பார்த்ததிலேயே அழகான பெண் லாஸ்லியா என்று அவர் கூறுகிறார். இதேபோல பாவனியை பார்த்தும் இதே டயலாக் அடிக்கிறார் மனிதர்.

மனிதனாக மாற்றிய லாஸ்லியா
தன்னை மனிதனாக மாற்றிய பெண் என லாஸ்லியாவை அவர் கைக்காட்டுகிறார். இதேபோல பாவனியை பார்த்து கைகாட்டுகிறார். ஒரே நேரத்தில் மனிதர் காத்து வாக்குல ரெண்டு காதலை செய்துவிட்டு, குத்தாட்டமும் போடுகிறார். தொடர்ந்து லாஸ்லியாவிடம் சென்று ஒற்றை ரோஜாவையும் பெறுகிறார்.

முகம் வாடிய பாவனி
அவர் லாஸ்லியாவிடம் பிரபோஸ் செய்வதைப் பார்த்து, அடப்பாவி என்று பாவனி கூறுகிறார். தொடர்ந்து அவர் ப்ரபோஸ் செய்வதை அடுத்து பாவனியின் முகம் மாறுகிறது. அவர்களுக்குள்ளான காதலை தொடர்ந்து அமீர் உறுதிப்படுத்தி வருகிறார். ஆனால் பாவனி மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.