»   »  ஏப்ரல் 14ல் டிவியில அனேகன், கத்தி, காவியத்தலைவன் போடுறாங்க!

ஏப்ரல் 14ல் டிவியில அனேகன், கத்தி, காவியத்தலைவன் போடுறாங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதியன்று இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக சன்டிவியில் அனேகன் படம் போடப்போறங்களாம்.

ஏப்ரல் 14 சன்டிவி தொடங்கப்பட்ட தினம் என்பதால் பிறந்தநாள் கொண்டாட்டமாக தனுஷ் நடித்த அனேகன் படம் ஒளிபரப்புவதாக முன்னோட்டம் போடுறாங்க.

தமிழ்புத்தாண்டு தினத்தன்று விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தில் உள்ள தொலைக்காட்சிகளில் திரைக்கு வந்து சிலமாதங்களே ஆன புத்தம் புது திரைப்படங்களை ஒளிபரப்புகின்றனர்.

அனேகன்

அனேகன்

சன் டிவியில் தனுஷ் நடித்த அனேகன் திரைப்படம் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்தப்படம் தவிர வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், நான் ஈ திரைப்படங்களும் ஒளிபரப்பாக உள்ளது. கே.டிவியில் இங்க என்ன சொல்லுது திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

கலைஞரில் ரத்த சரித்திரம்

கலைஞரில் ரத்த சரித்திரம்

கலைஞர் டிவியில் சூர்யா நடித்த ரத்த சரித்திரம், பரத் நடித்த கில்லாடி திரைப்படமும், ராகவா லாரன்ஸ் நடித்த முனி திரைப்படமும் ஒளிபரப்பாகிறது.

காவியத்தலைவன்

காவியத்தலைவன்

விஜய் டிவியில் புத்தம் புதிய திரைப்படமான சித்தார்த் நடித்த காவியத்தலைவன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. அன்றைய தினம் கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.

ஓகே கண்மணி

ஓகே கண்மணி

ஏப்ரல் 14 புத்தாண்டு ஸ்பெஷலாக காபி வித் டிடியில் ஓகே கண்மணி குழுவினர் பேட்டி ஒளிபரப்பாக உள்ளது. வைரமுத்து, மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

ஜெயாடிவியில் கத்தி

ஜெயாடிவியில் கத்தி

ஜெயாடிவியில் விஜய் - சமந்தா நடித்த கத்தி திரைப்படம் புத்தாண்டு ஸ்பெஷலாக ஒளிபரப்பாக உள்ளது.

ஜீ தமிழ் சிறப்பு திரைப்படம்

ஜீ தமிழ் சிறப்பு திரைப்படம்

தமிழ் புத்தாண்டு நாளன்று ஜீ தமிழ் டிவியில் கிருஷ்ணா நடித்த வானவராயன், வல்லவராயன் திரைப்படமும், ஜீவா நடித்த யான் திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.

ரிமோட் முக்கியம்

ரிமோட் முக்கியம்

எல்லாமே புதுப்படமா இருக்கே எதை பார்க்கிறது என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. அதுக்குத்தானே ரிமோட் இருக்கு... ஒவ்வொரு சேனலா மாத்தி மாத்தி பாருங்க. என்ன நான் சொல்றது?

English summary
Tamil New Year Special Blockbuster Movies – Kaththi, Madras, Anegan,Jeeva, Kaaviya Thalaivan are the Tamil New Year Special Movies in Television
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil