twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Aranmanai kili serial: கதாசிரியரே எதுக்கு இவ்ளோ கன்ஃபியூஷன்?

    |

    சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியல் கதாசிரியருக்கு கதையில் எதற்கு இத்தனை குழப்பங்கள் வந்துள்ளது. கதையை எந்த கோணத்தில்தான் கொண்டு செல்ல விரும்புகிறார் என்று சுத்தமாக புரியவில்லை.

    விபத்தில் கால்களில் அடிப்பட்டு, அர்ஜூனால் நடக்க முடியாமல் வீல் சேரில் அமரும்படி ஆகிவிடுகிறது. ஆனால், அவன் குடும்பம் பெரிய பணக்கார குடும்பம். தொழிலதிபர் மீனாட்சி அம்மாவின் ஒரே ஆசை மகன் இந்த அர்ஜுன்.

    நடக்க முடியாத அர்ஜுனுக்கு, வீட்டில் பண்ணை வேலை பார்க்கும் ஒருவரின் மகளை கல்யாணம் பண்ணி வைக்க நேரிடுகிறது. அவள்தான் இந்த ஜானு. இவளை கல்யாணம் செய்து கொள்வது அர்ஜூனுக்கும் பிடிக்கவில்லை, குடும்பத்துக்கும் பிடிக்கவில்லை.

    இப்போது சமாதானம்

    இப்போது சமாதானம்

    எப்படியோ அர்ஜூனுக்கும், ஜானகி என்கிற ஜானுவுக்கும் கல்யாணம் நடந்து விடுகிறது. முதலில் கோபத்தில் இருந்த அர்ஜுன் பின்னர் மனம் இளகி, ஜானுவுக்கு விவாகரத்து கொடுத்து, அவளது வாழ்க்கை நன்றாக அமையட்டும் என்று நினைக்கிறான். ஜானு கல்யாணம் ஆகி அந்த வீட்டுக்கு சென்று பல மாதங்கள் ஆகியும் ஒரு நாள்கூட இயக்குநர் அர்ஜுன் எழுந்து நடக்க ஏதாவது வைத்தியம் நடப்பது போன்ற காட்சி ஒன்று கூட வைக்கவில்லை.

    ஜானு பல வைத்தியங்கள்

    ஜானு பல வைத்தியங்கள்

    புருஷன் அர்ஜுன் எழுந்து நடக்க வேண்டும் என்று, ஜானு பல விரதங்கள் வைத்தியங்கள் என்று ஆரம்பித்து செய்து வருகிறாள். அப்போதும் நடக்காமல் போக, ஒரு ஆஷ்ரமத்துக்கு மீனாட்சி அம்மா டெல்லி சென்று இருக்கும் சமயம் அழைத்து வந்துடறா. அர்ஜுனும் ஜானு சொல்லும் அத்தனை விஷயத்தையும் கேட்கிறான். ஆஸ்ரமத்தில் மருந்து கொண்டுவா, பச்சிலை கொண்டுவா என்றும், அதற்கு ஏழு மலை தாண்டி ஆலங்கட்டி மலைக்கு போக வேண்டும் என்று வைத்தியம் பார்க்கும் சுவாமிஜி சொல்கிறார்.

    ஆலங்கட்டி மலைக்கும்

    ஆலங்கட்டி மலைக்கும்


    ஆலங்கட்டி மலைக்கும் சென்று வந்து விடுகிறாள் ஜானு. சுவாமிஜி சொன்ன பச்சிலையோடு வந்து வைத்தியம் பார்க்க ஆரம்பிக்கும் சமயத்தில் மீனாட்சி அம்மா வந்து அந்த மருந்தை தட்டி விட்டுடறாங்க. வீட்டுக்கு வர மாட்டேன் என்று மீண்டும் வைத்தியம் பார்க்க அடம் பிடிக்கறா ஜானு. மறுபடியும் ஒரு விஷப் பரீட்சை...

    சர்ப்ப கோயிலுக்கு போயி, நாக சிலைக்கு விளக்கு ஏற்றி வைத்து, எலுமிச்சம் பழம் வைத்து பூஜை செய்து, அதை மீண்டும் எடுத்து வந்து சுவாமிஜியிடம் கொடுக்கிறாள்.

    வனத்தில் வாசுகி

    வனத்தில் வாசுகி

    இது மட்டும் இல்லையாம்... வனத்தில் இருக்கும் நாக தேவர்களின் ராஜாவிடம் அனுமதி வாங்கி, வனத்தில் இருக்கும் வாசுகி பாம்பை தரிசித்து பூஜை செய்ய வேண்டுமாம். பிறகுதான் மீண்டும் வைத்தியம் பார்க்க முடியும் என்று சுவாமிஜி சொல்ல, அங்கும் மிக தைரியமாக பயணிக்கிறான் ஜானு. சரப்ப கோயிலுக்கு போகும்போது அங்கு அத்தனை பாம்புகள் ஊர்கின்றன.

    இப்போது வனத்தில் வாசுகி பாம்புக்கு பூஜை செய்யணுமாம்.

    எதற்கு குழப்பம்

    எதற்கு குழப்பம்

    கதை ஒன்று பாம்பு கதையாக இருக்க வேண்டும். இல்லை பாம்பு படமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இப்படிப்பட்ட ரிஸ்க்குகளை கதையில் கொண்டு வருவது நடைமுறைதான். அரண்மனை கிளி சீரியல் ஒரு குடும்பக் கதைதான். நடக்க முடியாத அர்ஜுனுக்கு ஒரு நாள்கூட வீட்டில் ஒரு டாக்டர் வந்து பார்க்கலை. ஆனால், இவளோ வைத்தியம் பார்க்கிறேன் என்று காடு மேடு, மலை, முகடு என்று சுற்றி அலைகிறாள்.இப்போது வாசுகி பாம்பாம்... நாகதேவர்களாம்..அதற்கு ஒரு தலைவனாம்...

    என்னங்க கதை இது...அர்ஜுன் நடக்க முடியலை...இது மட்டும்தான் கதையின் முடிச்சு. அதனால், எப்போதோ அவிழ்ந்து இருக்க வேண்டிய முடிச்சியை இப்படி ஜவ்வு மாதிரி இழுக்கறது மட்டுமில்லாமல், ஜானு பொண்ணுன்னு நினைச்சீங்களா... இல்லை காட்டுவாசியா... முடியலைங்க!

    English summary
    Vijay TV's aranmanai kili serialist has got a lot of confusion. She doesn't understand the angle from which the story is intended.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X