»   »  கலர்ஸ் மூலமா பொண்ணு தேடும் ஆர்யா... நிஜமாவே கல்யாணம் பண்ணிப்பாரா?

கலர்ஸ் மூலமா பொண்ணு தேடும் ஆர்யா... நிஜமாவே கல்யாணம் பண்ணிப்பாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
இன்று முதல் கலர்ஸ் தமிழ்

திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ள நடிகர் ஆர்யா, தனக்கான மணமகளை தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம தேடுகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு எங்க வீட்டு மாப்பிள்ளை என்று தலைப்பிட்டுள்ளனர். நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யாவுடன் நடிகை சங்கீதாவும் பங்கேற்கிறார். மணமகளைத் தேர்ந்தெடுக்க உதவுகிறாராம்.

Arya searches bride through Colors TV

இந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளியானதும் ஆர்யாவுக்காக கிட்டத்தட்ட 70 ஆயிரம் பெண்கள் விருப்பம் தெரிவித்தார்களாம். இவர்களில் 8000 பேர் இந்த நிகழ்ச்சிக்கான வெப்சைட்டிலும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்தார்களாம்.

காதல், பெண் பார்த்தல், நிச்சயதார்த்தம், திருமணம் போன்றவையெல்லாம் மிகவும் தனிப்பட்ட சமாச்சாரங்கள். இவற்றை தொலைக்காட்சியில் ஒரு ஸ்பான்சர்டு நிகழ்ச்சியாக நடத்துவது பணம் பார்க்கும் விஷயம்தானே?

இதை ஆர்யாவிடம் கேட்டால், சத்தியமடித்து மறுக்கிறார். முழுக்க முழுக்க திருமணம் செய்யும் நோக்கத்தில்தான் கலர்ஸ் டிவி மூலம் பெண் தேடுகிறாராம். பண நோக்கமே இல்லையாம். சரி நம்பிடுவோம்.

இந்த நிகழ்ச்சி மூலம் பெண் கிடைச்சிட்டா?

"நிச்சயம் கல்யாணம் பண்ணிக்குவேன் பாஸ்.. அதுக்காகத்தானே இப்படி மெனக்கெடறேன்," என்கிறார் ஆர்யா.

ஆனால் நிகழ்ச்சிக்கான ப்ரமோவில் காட்டப்பட்ட பெண்களைப் பார்த்தால், எல்லோருமே தொழில்முறை மாடல் அழகிகள் போலத்தான் தெரிந்தார்கள்!

English summary
Actor Arya is searching bride through Colors tv for his marriage.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil