Bigg Boss 9: கவர்ச்சி ஆட்டம் கன்ஃபார்ம்.. பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பலூன் அக்கா!

சென்னை: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. கடந்த சீசனை விஜய் சேதுபதி அவர்கள் தொகுத்து வழங்கிய நிலையில் இந்த சீசனையும் அவரே தொகுத்து வழங்குகிறார். இதில் முதல் போட்டியாளராக வாட்டர் மில்லன் திவாகர் முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்துள்ளார். தனது வாழ்க்கை பயணத்தை சொல்லிவிட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த அவரை விஜய் சேதுபதி வரவேற்று பாராட்டினார். நாம் யாருக்காகவும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை, நாம் நாமாக இருந்தால் போதும் என்றார்.

இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக பலூன் அக்கா அரோரா சின்கிளேர் நுழைந்துள்ளார்.
இன்ஃப்ளூயன்சராக இருந்து மாதம் பல லட்சங்களை சம்பாதித்து வரும் பலூன் அக்கா சோஷியல் மீடியாவில் கவர்ச்சியாக போட்டோஷூட்களை நடத்தி இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் என அனைத்து தளத்திலும் அதீத கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். யாஷிகா ஆனந்த், தர்ஷா குப்தா, மீரா மிதுன் என பிக் பாஸ் பிரபலங்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு கோலிவுட்டின் கவர்ச்சி புயலாக மாறி இருக்கிறார் பலூன் அக்கா.

BB9 Vijaysethupathi Balloon Akka 9
Photo Credit:

அரோரா சின்கிளேர்: பிக் பாஸில் இரண்டாவது போட்டியாளராக நுழைந்துள்ள அரோரா சின்கிளேர், மாடலில் ஈடுபடவேண்டும் என்பது என் ஆசை இல்லை படித்துக்கொண்டு இருந்த போது மாடலிங்கில் செய்தேன். 4 வருடத்திற்கு முன் தான் மாடலிங் செய்ய ஆரம்பித்தேன். எனக்கு நிறைய நண்பர்கள் இல்லை. ஆனால், மனத்திற்கு நெருக்கமாக ஒரே ஒரு நட்பு இருக்கிறது என்றார். நான் ஸ்கூல் படிக்கும் போது தான் பிக் பாஸ் வந்தது, ஸ்கூலில் அனைவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசுவார்கள். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நான் வருவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதில், நான் நுழைவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நுழைந்துள்ள பலூன் அக்கா, தண்ணீரை தேர்வு செய்து ப்ளூ டீமில் நுழைந்துள்ளார். வெளியில் கவர்ச்சி ஆட்டம் போட்ட பலூன் அக்காவின் ஆட்டம் பிக் பாஸ் வீட்டில் எப்படி இருக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X