»   »  அதே யானை போஸ்: பாகுபலி பிரபாஸ் போன்று மாஸ் காட்டும் கார்த்திகா, இது படம் அல்ல...

அதே யானை போஸ்: பாகுபலி பிரபாஸ் போன்று மாஸ் காட்டும் கார்த்திகா, இது படம் அல்ல...

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆரம்ப் என்னும் பிரமாண்ட தொலைக்காட்சி தொடரில் தேவசேனாவாக மிரட்டலாக உள்ளார் நடிகை கார்த்திகா.

நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா தாய் வழியில் நடிகையானார். ஆனால் அவரால் தனது தாயின் அளவுக்கு ஜொலிக்க முடியவில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார்.

நடிப்புத் திறன் இருந்தும் அவருக்கு வெற்றி மட்டும் கிடைக்கவில்லை.

டிவி சீரியல்

டிவி சீரியல்

தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பவர்கள் பெரிய திரைக்கு வரும் நேரத்தில் கார்த்திகா சின்னத்திரைக்கு சென்றுள்ளார். அதுவும் பிரமாண்ட தொடரின் நாயகியாக.

ராஜமவுலி

ராஜமவுலி

பாகுபலி படங்களுக்கு கதை எழுதிய இயக்குனர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் வரலாற்று பின்னணியில் எழுதி வரும் இந்தி தொலைக்காட்சி தொடர் ஆரம்ப்.

கார்த்திகா

கார்த்திகா

ஆரம்ப் தொலைக்காட்சி தொடரில் ராஜ்ஜியத்தை ஆளும் தேவசேனாவாக நடிக்கிறார் கார்த்திகா. ஆரம்ப் தொடர் ப்ரோமோ புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மிரட்டல்

மிரட்டல்

பாகுபலி படத்தில் பிரபாஸ் யானையின் தும்பிக்கையில் நிற்பது போன்று கார்த்திகாவும் நிற்கும் புகைப்படம் மிரட்டலாக உள்ளது. ஆக்ஷன் காட்சிகளுக்காக பிரத்யேக பயிற்சி எடுத்து வருகிறார் கார்த்திகா.

English summary
We had reported that there are two shows in the making that are inspired from SS Rajamouli's film Baahubali - Star Plus' Aarambh and Sony TV's Prithvi Vallabh. The television show Aarambh was recently launched and the promo of the show is out.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil