அசத்தலான பிபி ஜோடிகள் கிரான்ட் ஃபினாலே...டைட்டில் வின்னர் இவங்க தான்

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் துவங்கப்பட உள்ளது.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி தாமதமாக துவங்கப்படுகிறது. இதனால் பிக்பாஸ் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக முந்தைய நான்கு சீசன்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களை ஒன்றிணைத்து விஜய் டிவி நடத்திய நிகழ்ச்சி தான் பிக்பாஸ் ஜோடிகள் என்ற டான்ஸ் நிகழ்ச்சி.

பிபி ஜோடிகள் இறுதிப்போட்டி

பிபி ஜோடிகள் இறுதிப்போட்டி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் துவங்குவதற்கு முன் இடைப்பட்ட காலத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்த இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த டான்ஸ் ரியாலிட்டி ஷோவின் நடுவர்களாக ரம்யா கிருஷ்ணனும், நகுலும் பங்கேற்றனர். கடந்த சில மாதங்களாக நடைபெற்ற வந்த பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.

3 மணி நேர ஸ்பெஷல்

3 மணி நேர ஸ்பெஷல்

இந்நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. விஜய் டிவி.,யில் வார இறுதி சண்டே ஸ்பெஷல் 3 மணி நேர நிகழ்ச்சியாக பிக்பாஸ் ஜோடிகள் இறுதிப் போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக முந்தைய சீசன்களில் பங்கேற்ற லாஸ்லியா, ரம்யா பாண்டியன், அபிராமி வெங்கடாச்சலம், ஒவியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதி போட்டியாளர்கள்

இறுதி போட்டியாளர்கள்

இறுதிப் போட்டியில் சோம் சேகர், அனிதா, மோகன் வைத்தியா, ஜித்தன் ரமேஷ், ஆஜித், சம்யுக்தா ஷாம், அரந்தாங்கி நிஷா, தாடி பாலாஜி, பாத்திமா பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் 100 சதவீதம் பங்களிப்பை அளித்தனர். வனிதா விஜயக்குமார், ஷிவானி ஆகியோர் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இருந்து தாங்களாகவே விலகினர்.

Recommended Video

Shakila Daughter MILLA Quarantined in GRAND CHOLA HOTEL | Bigg Boss 5 Contestant
டைட்டில் வின்னர்

டைட்டில் வின்னர்

இருப்பினும் மக்களின் மனம் கவர்ந்த ஜோடியாக ஷாரிக் - அனிதா ஜோடி தேர்வு செய்யப்பட்டு, டைட்டிலை கைப்பற்றியது. வெற்றி பெற்ற ஜோடிக்கும் கோப்பையும், ரூ.3 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. ரன்னர் அப்பை கேப்ரில்லா- ஆஜித் மற்றும் ஜித்தன் ரமேஷ் - சம்யுக்தா ஜோடி கைப்பற்றின. இந்த இரு ஜோடிகளுக்கும் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

விரைவில் சீசன் 2

விரைவில் சீசன் 2

பிக்பாஸ் ஜோடிகள் முதல் சீசன் பிரம்மாண்ட வெற்றி பெற்றதை அடுத்து விரைவில் பிக்பாஸ் சீசன் 2 வை அறிவிக்க நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் போடட்டியாளர்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் டாப் போட்டியாளர்கள் கலந்து கொள்ள போகிறார்களாம். இதனால் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிந்த பிறகு அல்லது அதற்கு முன்னதாக பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X