அடுத்து பெரிசா ஒரு சம்பவம் இருக்கு...பாக்யலட்சுமி சீரியலில் அடுத்து இதுதான் நடக்க போகுது

சென்னை : விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது பாக்யலட்சுமி சீரியல். அடுத்து என்ன என்று ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் சீன்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

Recommended Video

Bakyalakshmi Serial | ராதிகாவிடம் கெஞ்சும் ரசிகர்கள்... அடுத்து என்ன? *TV | Filmibeat Tamil

கோபி - பாக்யாவிற்கு டைவர்ஸ் கிடைத்து விட்டது. கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார் பாக்யா. வீட்டிற்கான 40 லட்சத்தையும் ஒரே வருடத்தில் கொடுக்கிறேன் என்று கோபியிடம் சவால் விடுகிறார் பாக்யா.ராதிகா சமாதானம் ஆகாததால் காரிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார் கோபி.

மாமியார் ஈஸ்வரி, இனியா, செழியன் ஆகியோர் பாக்யாவிடம் கோபத்தை காட்டி, திட்டி தீர்க்கிறார்கள். இதற்கிடையில் ஸ்கூல் ஃபீஸ் கட்ட வேண்டும் என பாக்யாவிற்கு முதல் செக் வைக்கிறார் இனியா. தன்னிடம் உள்ள பணத்தை கணக்கு பார்த்த போது குறைவாக இருந்தாலும், மாமனார் ராமமூர்த்தி, எழிலின் உதவியை ஏற்க மறுக்கிறார் பாக்யா.

உச்சகட்ட வெறுப்பில் செழியன்

உச்சகட்ட வெறுப்பில் செழியன்

குடும்ப பொறுப்புக்களை, செலவுகளை தான் ஏற்க முடியாது என செழியன் சொல்ல, இது தொடர்பாக செழியன் - ஜெனி இடையே தினமும் வாக்குவாதம் நடக்கிறது. இதற்கிடையில் ஓட்டலில் ரூம் எடுத்து தங்கும் கோபியை தற்செயலாக பார்த்து விடுகிறார் ராதிகா. டீச்சர் ஏன் இப்படி பண்ணுறாங்க என நொந்து கொள்கிறார்.

மும்பை பிளானை தள்ளி வைக்கும் ராதிகா

மும்பை பிளானை தள்ளி வைக்கும் ராதிகா

வீட்டிற்கு வரும் ராதிகா மும்பை போகும் பிளானை தள்ளி வைப்பதாகவும், மயூ தற்போது படிக்கும் ஸ்கூலிலேயே சில மாதங்கள் படிப்பை தொடரட்டும் என்கிறார். இதனால் குஷியாகிறார் மயூ. அதோடு கோபியை பார்த்ததாகவும், அவர் ஓட்டலில் தங்கி இருப்பதாகவும் அம்மா மற்றும் அண்ணனிடம் சொல்கிறார் ராதிகா. இதோடு கடந்த வார எபிசோட் நிறைவடைகிறது.

திரும்ப திரும்ப பேசுறீங்க

திரும்ப திரும்ப பேசுறீங்க

கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக சென்ற பாக்யலட்சுமி சீரியலில், சென்ற வாரத்தில் அனைவரும் சொன்னதையே திரும்ப திரும்ப பேசி போர் அடித்தனர். இந்நிலையில் வரும் வார எபிசோடிற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.ரசிகர்கள் போர் அடிப்பதாக நினைப்பதை புரிந்து கொண்டாரோ என்னவோ, அடுத்த ட்விஸ்ட் விறுவிறுப்புக்கு தயாராகி விட்டார் டைரக்டர்.வரும் வாரத்திற்கான ப்ரோமோவில் செம ட்விஸ்ட் வைத்துள்ளார்.

அடுத்து நடக்க போகும் ட்விஸ்ட்

அடுத்து நடக்க போகும் ட்விஸ்ட்

அதில், அடுத்த நாள் இனியாவை பார்க்க ஸ்கூலுக்கு வரும் கோபியும், மயூவை ஸ்கூலில் விட வரும் ராதிகாவும் சந்தித்து கொள்கிறார்கள். ஸ்கூலில் கோபியை பார்த்து விட்டு பேசாமல் செல்லும் ராதிகாவை, கையை பிடித்து இழுத்து பேசுகிறார் கோபி. ராதிகாவின் கையை இறுக்கமாக பிடித்த படி, நாம கல்யாணம் செஞ்சுக்கலாம் என கெஞ்சி, உருக்கமாக பேசுகிறார் கோபி. அதே சமயம் இனியாவிற்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டுவதற்காக அங்கு வரும் பாக்யா அந்த காட்சியை பார்க்கிறார்.

பாக்யா அடுத்து என்ன செய்ய போகிறார்?

பாக்யா அடுத்து என்ன செய்ய போகிறார்?

செம கடுப்பாகி கோபத்துடன் முறைத்துக் கொண்டிருக்கிறார் பாக்யா. அடுத்து பாக்யா என்ன செய்ய போகிறார்? கோபிக்கு எந்த மாதிரி ஆப்பு வைக்க போகிறார்? கோபியை கல்யாணம் செய்ய ராதிகா ஓகே சொல்வாரா என ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளனர். ஆனால் மும்பை செல்லாமல் பிளானை தள்ளி போடும் ராதிகாவையும், கோபிக்கு ஆதரவாக பேசும் செழியனையும் நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் திட்டி தீர்த்து வருகின்றனர்.ராதிகாவை முதலில் ஊரை விட்டு துரத்துங்க...கோபியை இரண்டாவது திருமணம் செய்யாமல் போகமாட்டா போல என கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X