ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது....கண்ணம்மாவிடம் நேருக்கு நேர் சிக்கிக் கொள்ளும் செளந்தர்யா

சென்னை : மற்ற டிவி சேனல்கள் என்ன தான் புதுப்புது நிகழ்ச்சிகள், சீரியல்கள் என ஆரம்பித்தாலும் விஜய் டிவி சீரியல்களை அடித்துக் கொள்ள முடியவில்லை. தமிழ் டிவி சேனல்களிலேயே விஜய் டிவி சீரியல்களுக்கு தான் ரசிகர்களும் அதிகம், டிஆர்பி.,யும் அதிகம்.

டிஆர்பி ரேட்டிங்கை பொருத்தவரை பாரதி கண்ணாம்மா சீரியல் தான் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. இதற்கு காரணம் அந்த சீரியலின் ப்ரோமோ மட்டுமல்ல, அடுத்தடுத்த ட்விஸ்ட்களும் தான். சில விஷயங்கள் ஜவ்வாக இழுக்கப்பட்டு, அட போங்கப்பா என ரசிகர்களை அலுத்து போகும் அளவிற்கு இருந்தாலும் எதிர்பாராத ட்விஸ்ட்கள் வைப்பதில் இவர்களுக்கு ஈடு இணையே கிடையாது.

ப்ரோமோவில் காட்டப்படும் சுவாரஸ்யமான காட்சிகள் வார இறுதியில் தான் காட்டப்படும் என்றாலும், அடுத்து என்ன நடக்கும், சீக்கிரம் ட்விஸ்ட்டை காட்டுங்கப்பா என கேட்க வைக்கும் அளவிற்கு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி விட்டு விடுகிறார்கள், சீரியல் தயாரிப்பாளர்கள்.

 உண்மையை தெரிந்து கொள்ளும் கண்ணம்மா

உண்மையை தெரிந்து கொள்ளும் கண்ணம்மா

பாரதிக்கு எப்போது உண்மை தெரியும், பாரதியும் கண்ணம்மாவும் எப்போது ஒன்று சேர்வார்கள், வெண்பாவின் நிலை என்ன ஆகும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் கண்ணம்மாவிற்கு குழந்தைகள் பற்றிய உண்மை தெரிய வருகிறது. லேடி டாக்டர் ஒருவர் மூலம் தனக்கு இரட்டை குழந்தை பிறந்த உண்மையை தெரிந்து கொள்கிறாள் கண்ணம்மா.

எஸ்கேப் ஆகும் செளந்தர்யா

எஸ்கேப் ஆகும் செளந்தர்யா

டாக்டர் கூறியது உண்மை தானா, உண்மை என்றால் அந்த இன்னொரு குழந்தை யார், எங்கே உள்ளது, அந்த குழந்தையை தன்னிடமிருந்து பிரித்து எடுத்துச் சென்றது யார் என்ற உண்மையை தெரிந்து கொள்ள மாமியார் செளந்தர்யாவிற்கு போன் செய்கிறாள் கண்ணம்மா. ஆனால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி கண்ணம்மாவிடம் இருந்து எஸ்கேப் ஆகி வருகிறார் செளந்தர்யா.

கண்ணம்மாவை கடுப்பேற்றும் பாரதி

கண்ணம்மாவை கடுப்பேற்றும் பாரதி

இதற்கிடையில் அஞ்சலியின் வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கண்ணம்மாவை வெறுப்பேற்ற வெண்பா தனது மனைவி என சொன்ன பொய்யை தக்க வைக்க, வெண்பாவிடம் நெருக்கம் காட்டுகிறார் பாரதி. அவர் நினைத்தது போல் கண்ணம்மாவும் கடுப்பாகிறார். அதை பார்த்து வெண்பா, பாரதி இருவரும் சந்தோஷப்படுகிறார்கள்.

உண்மையை உடைக்கும் அஞ்சலி

உண்மையை உடைக்கும் அஞ்சலி

ஆனால் வெண்பாவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் பாரதியின் மனைவி கிடையாது என்ற உண்மையை அனைவர் முன்னிலையிலும் போட்டு உடைக்கிறார் அஞ்சலி. பாரதி, வெண்பாவை திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற உண்மை கண்ணம்மாவிற்கு தெரிகிறது. இப்படி கடந்த வார எபிசோட் முடிவடைகிறது.

சந்தோஷத்தில் செளந்தர்யா

சந்தோஷத்தில் செளந்தர்யா

இதைத் தொடர்ந்து வெளியாகி உள்ள அடுத்த வாரத்திற்கான ப்ரோமோவில், திருமணம் ஆகவில்லை என உண்மை தெரிய வந்ததால் வெண்பா ஓரங்கட்டப்படுகிறாள். பாரதியும், கண்ணம்மாவும் சேர்ந்து அஞ்சலியை ஆசிர்வாதம் செய்கிறார்கள். அப்பாடா ஒரு வழியாக கண்ணம்மாவிற்கு, பாரதிக்கும் வெண்பாவிற்கும் திருமணம் ஆகவில்லை என்ற உண்மை தெரிந்து விட்டது என்ற சந்தோஷத்தில் இருக்கிறார் செளந்தர்யா.

நேருக்கு நேர் சிக்க வைக்கும் கண்ணம்மா

நேருக்கு நேர் சிக்க வைக்கும் கண்ணம்மா

வளைகாப்பு முடிந்து, அஞ்சலி வீட்டு கார்டனில் கணவருடன் பேசிக் கொண்டிருக்கும் செளந்தர்யாவை நேருக்கு நேராக வளைத்து பிடிக்கிறாள் கண்ணம்மா. தனக்கு பிறந்தது இரட்டை குழந்தை தானா என கேட்கிறாள் கண்ணம்மா. கண்ணம்மாவின் இந்த கேள்வியால், இப்போது என்ன காரணத்தை சொல்லி தப்பிக்கலாம் என முயற்சிக்கிறார் செளந்தர்யா. ஆனால் கண்ணம்மா விடுவதாக இல்லை. இப்படி முடிகிறது அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ.

உண்மையை சொல்வாரா செளந்தர்யா

உண்மையை சொல்வாரா செளந்தர்யா

இந்நிலையில் கண்ணம்மா கேரக்டரில் நடிக்கும் ரோஷினி ஹரிப்பிரியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குழந்தைகள் ஹேமா - லட்சுமி இருவரும் ஒரே மாதிரி டிரெஸ் அணிந்திருக்க, அவர்களுடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோவை வெளியிட்டுள்ளார். இதனால் கண்ணம்மாவின் நெருக்கடியால் இனியும் உண்மையை மறைக்க முடியாது என நினைக்கும் செளந்தர்யா, கண்ணம்மாவிடம் ஹேமா உனக்கு பிறந்த குழந்தை தான் என்ற உண்மையை சொல்லி விடுவார் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X