»   »  அய்யோடா... அந்த அழகு தெய்வத்தின் மகளா இந்த பூமிகா?

அய்யோடா... அந்த அழகு தெய்வத்தின் மகளா இந்த பூமிகா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை கதாபாத்திரங்களுக்கு பேர் போன, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வம்சம் தொடரில் பூமிகாவும் தற்போது இரட்டை வேடத்தில் வரத் தொடங்கியுள்ளார்.

சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகா தொடர் வம்சம். ரம்யாகிருஷ்ணன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்தொடரில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் இரட்டை வேடத்தில் வருகின்றன.

இந்நிலையில், தற்போது பூமிகா வேடத்தில் நடித்துள்ள நடிகையும் இரண்டு வேடங்களில் வரத் தொடங்கியுள்ளார்.

தலைமறைவான மதன்...

தலைமறைவான மதன்...

மலைப் பிரதேசத்துப் பெண்ணான பூமிகா, தன்னைக் காதலித்து ஏமாற்றிய டாக்டர் மதனைப் போராடிக் கரம் பிடித்துள்ளார். ஆனால், மனைவியை வெறுக்கும் மதன், பூமிகாவைப் பழி வாங்குவதற்காக தனது கைக்குழந்தையுடன் தலைமறைவாகி விட்டார்.

தேடி அலையும் பூமிகா...

தேடி அலையும் பூமிகா...

கணவரையும், குழந்தையையும் தேடி தெருத்தெருவாக அலைந்து வருகிறார் பூமிகா. இடையில் பூமிகாவை அவரது எதிரிகள் பல்வேறு வகைகளில் பைத்தியமாக்க முயற்சித்து வருகின்றனர்.

பூமிகாவின் அம்மா...

பூமிகாவின் அம்மா...

இந்த சூழ்நிலையில் புதிதாக பூமிகாவின் புகைப்படத்தை வைத்து ஒருவர் அஞ்சலி செலுத்துவது போல் கடந்த சில நாட்களுக்கு முந்தைய எபிசோட்களில் காட்டினர். அப்போதே நமக்குப் புரிந்து போனது அது நிச்சயம் பூமிகாவின் அம்மாவாகத் தான் இருக்க வேண்டும் என.

தேவிகாவாம்...

தேவிகாவாம்...

இந்நிலையில், தற்போது பூமிகாவை அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றுள்ள அந்த முதியவர் தனது காதல் கதையை எடுத்துச் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார். அந்தப் போட்டோவில் இருப்பவர் பெயர் தேவிகாவாம்.

மலைப்பெண்...

மலைப்பெண்...

அவரது நடை, உடை, பாவனைகளைப் பார்க்கும் போது, அப்படியே பூமிகா போலவே இருக்கிறது. மலைக்காட்டில் இருந்து சிங்காரச் சென்னைக்கு வந்து இத்தனை எபிசோட்கள் கடந்த பின்னும் தொடர்ந்து மலைப்பெண் போன்றே உடை அணிந்து தான் வலம் வந்தார் பூமிகா.

மீண்டும் தாவணி...

மீண்டும் தாவணி...

கடந்த வாரம் தான் அவரது வித்தியாசமான சேலை கட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், பிளாஷ் பேக்கில் மீண்டும் அவரை பாவாடை தாவணி கட்ட வைத்து விட்டார் இயக்குநர்.

வித்தியாசமான கெட்டப்புகளில்...

வித்தியாசமான கெட்டப்புகளில்...

முன்பெல்லாம் கார்ட்டூன் தொடர்களில் ஒரே கதாபாத்திரம் ஒவ்வொரு எபிசோடிலும் வெவ்வேறு விதமான கெட்டப்புகளில் வரும். ஏறக்குறைய அதே பார்முலாவில் வம்சம் சீரியலிலும் ஒவ்வொரு கதாபாத்திரமும் சம்பந்தமே இல்லாமல் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் உலா வருகின்றன.

புது அவதாரம்...

புது அவதாரம்...

ஏற்கனவே பூமிகா நடிகையாக சிறிது காலம் மாடர்ன் டிரஸ்ஸில் நடித்திருந்தார். தற்போது பாவாடை தாவணி கட்டி புது அவதாரம் எடுத்துள்ளார்.

முந்தானை முடிச்சு...

முந்தானை முடிச்சு...

இது ஒருபுறம் இருக்க, முந்தானை முடிச்சு படத்தை உல்டா செய்தது போல் டாக்டர் மதன் மலைக்கிராமம் ஒன்றிற்கு டாக்டராக குழந்தையுடன் பணிக்குச் சென்றுள்ளார். அங்கு ஏறக்குறைய ஊர்வசி போன்றே துருதுருவென இளம்பெண் ஒருவரும் உள்ளார்.

மீண்டும் திருமணம்...

மீண்டும் திருமணம்...

ஏற்கனவே நீங்க மதனா இல்லை மன்மதனா எனக் கேட்க வைக்கும் அளவிற்கு இந்தச் சீரியலில் மதனின் திருமணப்படலம் ஏராளம். இந்நிலையில் புதிதாக விரைவில் மலைக்கிராமத்தில் அந்தப் பெண்ணையும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கும் என நாம் தாராளமாக எதிர்பார்க்கலாம்.

சத்தியமே செய்யலாம் பாஸ்...

சத்தியமே செய்யலாம் பாஸ்...

ஆனால், அதையும் எப்படியும் பூமிகாவும், அர்ச்சனாவும் முறியடித்து மீண்டும் ஜெயிப்பார்கள் என நாம் சூடம் அடித்தே சத்தியம் செய்யலாம்.

English summary
In Vamsam serial, one of the lead character Bhoomika is also double role now.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil