»   »  வீட்டுக்கு போகத் துடிக்கும் ஜூலி: அப்ப 'பிக் பாஸ்' அவ்ளோ தானா?

வீட்டுக்கு போகத் துடிக்கும் ஜூலி: அப்ப 'பிக் பாஸ்' அவ்ளோ தானா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார் ஜூலி.

உலக நாயகன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை சமூக வலைதளங்களில் கேவலமாக விமர்சித்து வருகிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டப் புகழ் ஜூலியை வைத்தே நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள்.

இந்நிலையில் மீண்டும் ஜூலியை டார்கெட் செய்துள்ளார்கள்.

ஆர்த்தி

குண்டு ஆர்த்திக்கும், ஜூலிக்கும் இடையே சண்டை ஏற்படுவது போன்ற ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். சண்டையின் முடிவில் வழக்கம் போல ஜூலி அழுகிறார்.

ஜூலி

ஜூலி

நான் ஒன்றும் நடிக்கவில்லை எனக்கு தோன்றும்படி தான் நடக்கிறேன் என்று ஜூலி ஆர்த்தியிடம் கூறுகிறார். நாம் எல்லாம் நடிப்பை விட்டுவிட்டு வந்துள்ளோம் இந்த ஜூலி இப்ப தான் நடிக்க ஆரம்பிச்சிருக்காங்க என்கிறார் ஆர்த்தி.

போலி

போலி

நான் நடிக்கிறேன், ஃபேக் என்றெல்லாம் சொன்னாங்க என்றால் அவ்வளவு தான் என்று கூறிய ஜூலி கேமரா முன் நின்று பிக் பாஸ் நான் எங்க வீட்டுக்கு போகணும் இப்பவே போகணும், நான் பேக் பண்றேன் என்கிறார்.

நமீதா

நமீதா

நேற்றைய ப்ரொமோ வீடியோவில் நமீதா வீட்டுக்கு போக பேக் செய்வது போன்று காட்டினார்கள். ஜூலி கிளம்பினால் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒரு புள்ளையும் பார்க்காது. அதனால் அவரை வீட்டுக்கு விட மாட்டார்கள் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

English summary
Big Boss contestant Juliana has said in front of the camera that she wants to go home immediately.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil