இது என்னோட ஃபர்ஸ்ட் கார்.. சந்தோஷத்தில் கேபி வெளியிட்ட பிக்ஸ்.. பிக் பாஸ் பிரபலங்கள் வாழ்த்து!

சென்னை: பிக் பாஸ் சீசன் 4ல் 5 லட்சம் ரூபாய் பெட்டியுடன் எஸ்கேப் ஆன கேபி முதன் முறையாக கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

Recommended Video

Baakiyalakshmi கிட்ட வசமாக சிக்கும் Gopi | Serial Updates with Akshu|Filmibeat Tamil

விஜய் டிவி பிரபலங்கள் பலரும் சமீபத்தில் புதிய கார்களை வாங்கி போட்டோக்களாக போட்டு சமூக வலைதளங்களை நிரப்பி வருகின்றனர்.

அந்த வரிசையில் சம்பாதித்து வாங்கிய முதல் காரின் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார் பிக் பாஸ் பிரபலம் கேபி எனும் கேபிரியல்லா சார்ல்டன்.

5 லட்சம் பெட்டியுடன்

5 லட்சம் பெட்டியுடன்

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ரியாலிட்டி ஷோவிலும், தொடர்களிலும் நடித்து வருகிறார் கேபி. பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட கேபி 5 லட்ச ரூபாய் பெட்டியுடன் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேறி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். கேபிக்கு டைட்டில் கிடைக்காது என்பதை புரிந்து கொண்டு ஸ்மார்ட் மூவ் செய்தார் என பலரும் பாராட்டினார்கள்.

பகீர் கிளப்பிய சீரியல் புரமோ

பகீர் கிளப்பிய சீரியல் புரமோ

பிக் பாஸ் ஜோடிகள், முரட்டு சிங்கிள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கேபி, ஈரமான ரோஜாவே 2 சீரியலில் காதலித்த காதலனை விடுத்து இன்னொருவரை சூழ்நிலை காரணமாக திருமணம் செய்து கொள்ளும் பகீர் கிளப்பும் புரமோவில் நடித்து தனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். மேலும், அந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

முதல் கார்

முதல் கார்

பல ஆண்டுகளாக விஜய் டிவியில் நடித்து வரும் கேபி தற்போது தான் முதல் காரை வாங்கி உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்து தனது சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார். கேபி காருடன் வெளியிட்டுள்ள பிக்ஸ் எல்லாம் செம வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

என்ன கார்

என்ன கார்

Tata Harrier Dark Edition காரை பிக் பாஸ் பிரபலம் கேபி வாங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கார் வாங்கிய சந்தோஷத்தில் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்களையும் காருக்குள் அமர்ந்து அந்த காரை முதல் முறையாக டிரைவ் செய்யும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் கேபி.

என்ன விலை

என்ன விலை

இந்த Tata Harrier Dark Edition விலை 20 முதல் 21 லட்சம் வரை என விற்பனை தளங்களில் விலைப் பட்டியல்கள் போடப்பட்டிருக்கின்றன. தனது அம்மாவுடன் கேக் வெட்டும் புகைப்படம் மற்றும் கார் மீது ஆசை ஆசையாய் சாய்ந்திருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். முதல் முறையாக கார் வாங்கிய கேபிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும் அட்வைஸ்களையும் கூறி வருகின்றனர்.

ஆஜித், ரம்யா பாண்டியன் வாழ்த்து

ஆஜித், ரம்யா பாண்டியன் வாழ்த்து

பிக் பாஸ் வீட்டில் இருந்தே கேபியின் தோழனாக சுற்றி வருகிறார் ஆஜித். கார் வாங்கிய போஸ்ட்டை கேபி போட்டதும் முதல் ஆளாக வந்து வாழ்த்துக் கூறியுள்ளார். மேலும், பிக் பாஸ் பிரபலங்களான ரம்யா பாண்டியன் மற்றும் சம்யுக்தா உள்ளிட்டோர் கேபிக்கு தங்களது வாழ்த்துக்களையும் எங்களையும் ஒரு முறை ட்ரிப் கூட்டிப்போ என கோரிக்கைகளையும் வைத்துள்ளனர். சீக்கிரமே ஆஜித் மற்றும் பிக் பாஸ் பிரபலங்களுடன் கேபி காரில் சுற்றும் போட்டோக்களும் வரும் என எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X