For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கமலையே ஏமாற்றி அழகாக பொய் சொன்ன சாண்டி, லாஸ்லியா.. நீலசாயம் வெளுத்து போச்சு டும் டும் டும்!

  |
  Bigg Boss 3 Tamil : Promo 2 : Day 64

  சென்னை: கமல் முன்னிலையிலேயே சாண்டியும், லாஸ்லியாவும் அப்பட்டமாக பொய் சொன்னது அம்பலமாகியுள்ளது.

  நீண்ட நாட்களாக மக்கள் எதிர்பார்த்தபடி இந்த வாரம் கமல் சாட்டை எடுத்து போட்டியாளர்கள் மீது வீசிவிட்டார். சாண்டி கஸ்தூரியை சத்துணவு ஆயா என கிண்டல் செய்தது தொடர்பாக கமல் கண்டித்தார்.

  அப்போது சாண்டி தான் அப்படி கிண்டல் செய்யும் விதமாக கூறினேனே தவிர சத்தியமாக சத்துணவு ஆயாக்கள் பற்றி தரக்குறைவாக பேசவில்லை என விளக்கம் அளித்தார். அதோடு தானும் பன்னிரெண்டாம் வகுப்பு வரை சத்துணவு வாங்கி சாப்பிட்டு வளர்ந்ததாக கமலிடம் அவர் கூறினார்.

  ஆதாரம்

  ஆதாரம்

  இதனால் கமலும் சரி, மக்களும் சரி சமாதானம் ஆகினர். ஆனால் சாண்டிக்கூறியது தவறான தகவல் என நெட்டிசன்கள் புகைப்பட ஆதாரத்துடன் பதிவிட்டு வருகின்றனர். அதில் சாண்டி படித்தது சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள புனித காப்ரியல் மேனிலைப் பள்ளியில் தான். அது பணக்கார மாணவர்கள் படிக்கும் டான் பாஸ்கோ கல்வி குழுமத்துடன் இணைந்த பள்ளி என்றும், எனவே சாண்டி கமலிடம் பொய் சொல்லியிருக்கிறார் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

  சாண்டி ஆர்மி

  சாண்டி ஆர்மி

  ஆனால் இதற்கும் சாண்டி ஆர்மியினர் ஒரு விளக்கம் அளித்துள்ளனர். சாண்டி என்ஜிஓ ஒன்றின் மூலம் கல்வி உதவிப் பெற்று அப்பள்ளியில் படித்தார் என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த பள்ளியில் அவருக்கு உணவு, சீருடை, புத்தகங்கள் இலவசமாக வழங்கபட்டது எனவும் சாண்டி ஆர்மி அப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.

  கேள்வி

  கேள்வி

  இருந்தபோதும், சாண்டி ஆர்மியின் இந்த விளக்கத்தை நெட்டிசன்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சாண்டியின் தந்தை காவல்துறையில் வேலை பார்த்தவர். அப்படி இருக்கையில் அவர் ஏன் என்ஜிஓக்களின் உதவியை பெற்று படித்திருப்பபோகிறார் என்ற கேள்வியை நெட்டிசன்கள் முன்வைக்கின்றனர். அதோடு அத்தகைய பெரும் பள்ளிகளில், அரசு பள்ளியை போல் சத்துணவு வழங்க வாய்ப்பில்லை என்பதும் அவர்களது வாதம்.

  நாடகம்?

  நாடகம்?

  இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது மக்களிடம் சிம்பதியை பெற கமல் முன்னிலையில் சாண்டி பொய் சொன்னாரோ எனும் சந்தேகம் வலுத்துள்ளது. அல்லது சரவணன் போன்று சாண்டியையும் பிரச்சினையில் சிக்க வைக்க விரும்பாத பிக் பாஸ், இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

  சேரன் விவகாரம்

  சேரன் விவகாரம்

  இதேபோல் லாஸ்லியாவும், கமல் முன்பு அப்பட்டமாக பொய் சொன்னது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சேரன் சாப்பிட அழைத்த போது ஏன் போகவில்லை என கமல் கேட்டதற்கு, 'சேரனை நாமினேட் செய்ததால், மனவருத்தத்தில் இருந்தேன். குற்ற உணர்ச்சியால் அவரை சந்திப்பதை தவிர்த்தேன்', என லாஸ்லியா பதிலளித்தார்.

  குறும்படம் போட்ட நெட்டிசன்ஸ்

  ஆனால் இதுவும் அப்பட்டமான பொய் என குறுப்படம் போட்டு நெட்டிசன்கள் காட்டிவிட்டனர். சேரன் சாப்பிட அழைத்த போது காலை 11 மணி. ஆனால் லாஸ்லியா அவரை நாமினேட் செய்ததோ 12.30 மணிக்கு மேல். கவினுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே அவர் சாப்பிடாமல் காலம் தாழ்த்தி வந்தார்.

  அதுவல்ல காரணம்

  அதுவல்ல காரணம்

  கவினும் சாண்டியும் கூட லாஸ்லியாவை சாப்பிட சொன்னார்கள். அப்படி இருக்கையில் சேரனை நாமினேட் செய்ததால் தான் அவருடன் சேர்ந்து சாப்பிடுவதை தவிர்த்ததாக லாஸ்லியா கூறியது பொய் என்பது உறுதியாகியுள்ளது. இவற்றின் மூலம் கமல் முன்னிலையில் லாஸ்லியாவும் தைரியமாக பொய் சொல்லியது அம்பலமாகி விட்டது.

  ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

  ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

  கடந்த சீசன்களில் இருந்து வேறுபட்டு, இம்முறை நெட்டிசன்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கமலுக்கு முன்னரே பல சந்தர்ப்பங்களில் அவர்கள் குறும்படம் போட்டு விடுகின்றனர். இது தெரியாமல் பிக் பாஸ் போட்டியாளர்கள் வாய்க்கு கிடைத்தபடி பொய் பேசி வருவது, அவர்கள் மீதான நன்மதிப்பை கெடுத்து விடுகிறது.

  English summary
  Losliya, Sandy lied to Kamal in Bigg boss tamil 3. But netizens digs out the truth with their detailed investigation.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X