ரட்சகன் 2 படம் பண்ண போறேன்.. 3 ஹிட் படம் கொடுத்து நான் ஏன் தோற்றேன் தெரியுமா? - பிரவீன் காந்தி!
சென்னை: நாகார்ஜுனாவை வைத்து ரட்சகன் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்ஹ பிரவீன் காந்தியா பிக் பாஸ் வீட்டில் இப்படி ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கிறார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், தனது கடந்து வந்த பாதை கதை சொல்லலின் போது தன்னுடைய வளர்ச்சி மற்றும் சரிவுக்கான காரணத்தை பிரவீன் காந்தி வெளிப்படையாக கூறி அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வளரும் கலைஞர்களை மட்டுமின்றி வாழ்க்கையில் ஃபிளாப் ஆன சில பிரபலங்களையும் உள்ளே விட்டு இவர்களுடைய வாழ்க்கையை விட உங்கள் வாழ்க்கை மோசமானது கிடையாது என்கிற பாடத்தையே நடத்தி வருகிறது பிக் பாஸ்.

ஓவியா, ஹரிஷ் கல்யாண், சேரன், சரவணன், வனிதா விஜயகுமார் என ஏகப்பட்ட பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இளம் கலைஞர்களுடன் இவர்களும் போட்டி போட்டு விளையாடி வருவதை மக்கள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். முதல் வாரத்திலேயே பிரவீன் காந்தி வெளியேறும் விளிம்பில் உள்ள நிலையில், அவரது கதை ரசிகர்களை உருக வைத்துள்ளது.
ரட்சகன், ஜோடி, ஸ்டார்: 1997ம் ஆண்டு நாகார்ஜுனா, சுஷ்மிதா சென் என மிகப்பெரிய ஸ்டார் காஸ்ட்டை வைத்து படம் எடுத்து சூப்பர் ஹிட் கொடுத்து சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் தான் பிரவீன் காந்தி. அந்த படத்தைத் தொடர்ந்து பிரசாந்த், சிம்ரனை வைத்து 1999ம் ஆண்டு ஜோடி படத்தை இயக்கினார். அந்த படத்தில் சைடு ரோலில் நடித்த த்ரிஷாவே இன்றைக்கு டாப் ஹீரோயினாக உள்ளார். ஆனால், பிரவீன் காந்தியின் நிலைமை மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. ஜோடி படத்தைத் தொடர்ந்து மீண்டும் பிரசாந்த் உடன் இணைந்து ஸ்டார் படத்தை இயக்கினார். அந்த படத்தில் ஜோதிகா ஹீரோயினாக நடித்திருந்தார். இயக்குநராக பிரவீன் காந்திக்கு 3 படங்களுமே ஹிட் படங்கள் தான்.
எங்கே தோற்றேன் தெரியுமா?: தனது வெற்றிப் பயணம் குறித்து பேசிய பிரவீன் காந்தி அதன் பின்னர் தான் எங்கே சறுக்கினேன் தெரியுமா என்று சொல்லிவிட்டு, ஹீரோவாக துள்ளல் படத்தில் நடித்தேன். அந்த முடிவை எடுக்கும் போதே பலர் நீங்க இன்னும் நிறைய நல்ல படங்கள் பண்ண வேண்டும் என்றும் செட்டில் ஆக வேண்டும் என அட்வைஸ் செய்தார்கள். ஆனால், அப்போது எனக்குள் இருந்த "நான்" என்கிற ஆணவம் தான் என்னை அழித்தது என வெளிப்படையாக பேசியுள்ளார்.
உலகம் போற்றும் நான் ஆக மாறுவீர்கள்: மேலும், பிக் பாஸ் போட்டியாளர்களிடம் அப்போது தோன்றும் 'நான்" என்கிற ஆணவத்தை மட்டும் காலடியில் வைக்க கத்துக்கிட்டீங்கனா உலகம் போற்றும் "நான்" ஆக மாறுவீங்க என மிகப்பெரிய வாழ்க்கை பாடத்தை கொடுத்துள்ளார்.
ரட்சகன் 2: குபேரா, கூலி என மீண்டும் நாகார்ஜுனா கிரேஸ் வந்துள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே போனால், ரட்சகன் 2 படத்தை எடுக்கும் முயற்சியை கையில் எடுப்பேன் என்றும் பிரவீன் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதல் வாரம் பிரவீன் காந்தி அல்லது அகோரி கலையரசன் இருவரில் ஒருவர் எவிக்ட் ஆவது உறுதியாகி உள்ளது. இன்று இரவு அல்லது நாளை லீக் ஆகிவிடும்.


Click it and Unblock the Notifications











