Bigg Boss: ஆதிரையின் கேவலமான ஐடியா.. வெளியே காதலர் இருக்கும்போது FJக்கு ரூட்டு விட காரணம் என்ன?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 மூன்றாவது வாரம் நிறைவடையப் போகிறது. போட்டியாளர்களில் இயக்குநர் பிரவீன் காந்தி, மாடல் அப்சரா என இருவர் ரசிகர்களால எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இப்படி இருக்கும்போது, போட்டியாளர் நந்தினி மட்டும் அவராகவே வெளியேறினார். இப்படி இருக்கும்போது, இந்த வாரத்தில் யார் எல்லாம் வெளியேற போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இப்படி இருக்கும்போது, போட்டியாளர் ஆதிரை சக போட்டியாளர் FJவிடம் நடந்து கொள்ளும் முறை, FJ-வுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, " ஆதிரை இரண்டாவது வாரத்தில் இருந்து இந்த FJவுடன் நெருக்கமாகவே பழகி வந்தார். இப்படி இருக்கையில் சக பெண் போட்டியாளர்களில் ஒருவர் கேட்கும்போது, எனக்கு வெளியே காதலர் இருக்கிறார்தான், அதற்காக அழகாக ஒருவர் இருந்தால் சைட் அடிக்க கூடாது என்று எதுவும் இல்லையே என்று கேட்டார் ஆதிரை. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் நேரடியாகவே FJவிடம் சென்று, என்னுடைய பலமும் நீதிதான் பலவீனமும் நீதான் என்று கூறியிருந்தார்.

ஆதிரை இவ்வாறு சொன்ன பிறகு, FJ சுதாரித்துக் கொண்டு, ஆதிரையிடம் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளியை கடைபிடிக்க ஆரம்பித்தார். FJவின் இது மாதிரியான நடவடிக்கைகள் ஆதிரைக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆதிரை , FJ இருவரும் நெருங்கிப் பழகியதைப் பார்த்த ரசிகர்கள் இவர்கள் இருவரும் லவ் கண்டெண்ட் கொடுக்கிறார்கள் என்றுதான் நினைத்துக் கொண்டார்கள். நெருக்கமாக அமர்வதும், ஒருவரை ஒருவர் சமாதானப்படுத்துவதும் என இருந்தார்கள்.
விடாமல் துரத்தும் ஆதிரை: ஆனால் இவர்களில் FJ மட்டும் விலகி விலகி சென்று கொண்டு இருக்க, ஆதிரை விடாமல் துரத்தி துரத்தி சென்று கொண்டிருக்கிறார். வடிவேலு ஒரு படத்தில் சொல்லுவார் அல்லவா, ' இவன் கம்முனு இருந்தாலும் அவ கம்முனு இருக்க மாட்டா போலயே' என்று அதுபோல் ஆதிரை FJக்கு தொடர்ந்து தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

ஆதிரைக்கு வெளியே காதலர்: இந்த விவகாரம் இப்போது பெரிய அளவில் உருவெடுத்துள்ளது. அதாவது, ஆதிரை தனது காதலரிடம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது அங்கு வரும் போட்டியாளர்கள் யாருடனாவது காதலில் இருப்பது போல நடிப்பேன், அதையெல்லாம் நீ பெரிதாக கண்டு கொள்ளாதே, அதேபோல் உனது வீட்டிலும் அதைச் சொல்லி புரிய வைத்துவிடு, என்றும் சொல்லிவிட்டு வந்துள்ளதாக கூறியதாக கனி திருவும், FJவும் பேசிக் கொள்கிறார்கள்.
ரசிகர்கள் ரியாக்ஷன்: அப்போது, FJ மிகத் தெளிவாக ஒன்றைக் கூறுகிறார், ஆதிரைக்கு வெளியே காதலர் இருக்கும்போது நான் எப்படி இப்படி நடந்து கொள்ள முடியும், என்னுடைய மனதில் அப்படியான எண்ணமே இல்லை எனும்போது நான் எப்படி அப்படி நடந்துகொள்ள முடியும், ஆதிரை மட்டுமல்ல, இங்கு இருக்கும் யாரிடமும் அப்படியான கண்ணோட்டத்தில் பழகும் எண்ணம் என்னிடத்தில் இல்லை என்கிறார். கனியும் FJவும் பேசிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் பிக்பாஸில் எவிக்ஷனில் இருந்து தப்பிக்க ஆதிரை இவ்வளவு கேவலமான ஐடியாக்களை எல்லாம் நடத்துவாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











