Bigg Boss: புரோமோவில் என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி.. ஷாக் ஆன ரசிகர்கள்.. கெஞ்ச ஆரம்பிச்சுட்டாங்களே!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இரண்டு வாரங்கள் முடிந்து மூன்றாவது வாரத்தில் சென்று கொண்டுள்ளது. இப்படி இருக்கும்போது, இரண்டு வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் என்னவென்றால் இந்த சீசன் பிக்பாஸில் பெரிய அளவில் ஈர்ப்பே ரசிகர்களுக்கு ஏற்படவில்லை. இப்படி இருக்கும்போது இன்று அதாவது அக்டோபர் 22 ஆம் தேதி பிக் பாஸ் தரப்பில் இருந்து வெளியான புரோமோவைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் மூன்றோ அல்லது நான்கு வாரங்களுக்குப் பிறகோ வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் போட்டியாளர்கள் களமிறக்கப்படுவது என்பது வாடிக்கையான ஒன்றுதான். கடந்த சீசனில் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் களமிறங்கிய ரயான், ரசிகர்கள் மத்தியிலும் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களால் டாஸ்க் பீஸ்ட் என்று அழைக்கப்பட்டார். அதேபோல் 7வது சீசனில் வைல்ட் கார்ட் மூலம் போட்டியில் களமிறங்கிய போட்டியாளர்களான அர்ச்சனா மற்றும் தினேஷ் கடைசி நாட்கள் வரை போட்டியாளர்களாக வீட்டிற்குள் இருந்தார்கள். இதில் அர்ச்சனா டைட்டிலை தட்டித் தூக்கினார்.

Bigg boss tamil 9 promo for Wild Card Entry Fans Requsting For Good Contestants

அதேபோல் முதல் சீசனில் இன்றைக்கு தமிழ் சினிமாவைக் கலக்கிக் கொண்டு உள்ள ஹரீஷ் கல்யாண் வைல்ட் கார்டு போட்டியாளராக தான் களமிறங்கினார். இப்படி இருக்கையில் இந்த சீசனில் வைல்ட் கார்ட் மூலம் போட்டியாளர்களை களமிறக்க பிக்பாஸ் தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், அதை பிக் பாஸ் தரப்பில் இருந்து புரோமோ வீடியோ வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

மொக்கை ஆட்டம்: நான்கு வாரங்கள் முடிந்த பின்னர்தான் வழக்கமாக வைல்ட் கார்டு போட்டியாளர்கள் களமிறக்கப்படுவார்கள். ஆனால் இந்த சீசனில் போட்டியாளர்கள் மிகவும் மொக்கையாக விளையாடிக் கொண்டு இருப்பதால், ரசிகர்கள் பலரும் இந்த சீசனை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், போட்டியாளர்கள் எந்த அளவுக்கு மோசமாக விளையாடிக் கொண்டு உள்ளார்கள் என்று ரசிகர்கள் நாள்தோறும் சுட்டிக் காட்டிக் கொண்டு உள்ளார்கள்.

Bigg boss tamil 9 promo for Wild Card Entry Fans Requsting For Good Contestants

புது ப்ரோமோ: இப்படி இருக்கையில், பிக் பாஸ் தரப்பில் இருந்து வெளியிடப் பட்டுள்ள புரோமோவில் விரைவில் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் களமிறங்க உள்ளார்கள் என்று விஜய் சேதுபதி கூறுகிறார். இதைப் பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள், அந்த புரோமோவின் கமெண்ட் செக்‌ஷனுக்குச் சென்று, தயவு செய்து வைல்ட் கார்ட் போட்டியாளர்களையாவது நல்ல போட்டியாளர்களாக களமிறக்குங்கள் என்றும் பதிவிட்டு வருகிறார்கள். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சில இணையவாசிகளோ, பிக் பாஸ் வரலாற்றிலேயே வைல்ட் கார்ட் மூலம் போட்டியாளர்களை களமிறக்குகிறோம் என்று அறிவிக்கிறார்கள் என்றால், இந்த சீசன் எவ்வளவு மோசமாக சென்று கொண்டு உள்ளது என்று பாருங்கள் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X