Bigg Boss: கம்ருதீனுக்கும் விழுந்த திட்டு.. விஜய் சேதுபதி வெறியா தான் இருக்காரு போலயே!
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9இன் முதல் வார முடிவில் தொகுப்பாளர் விஜய் சேதுபதி போட்டியாளர்களை போட்டு தாளித்து வருகிறார். ஏற்கனவே வெளியான முதல் புரோமோவில் ஆதிரையைப் போட்டு தாளித்திருந்தார். அதேபோல் தற்போது இரண்டாவது புரோமோவில் கம்ருதீனைப் போட்டு தாளித்து உள்ளார். இரண்டாவது புரோமோ ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
அதாவது இந்த வாரத்தில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் என்பது, தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துவது தான். இந்நிலையில் போட்டியாளர்களில் இருந்து கமருதீன் மற்றும் சபரி ஆகியோர் தண்ணீரை பிடிப்பதில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். ஆனால் கம்ருதீனும் சபரியும் அந்த வேலையில் ஒரு நாள் கோட்டை விட்டு விட்டார்கள். இப்படி இருக்கும்போது, இது சக போட்டியாளர்களால் விமர்சிக்கப்பட்டது. இப்படி இருக்கும்போது, தன்னை நோக்கி வந்த விமர்சனங்களை எதிர் கொள்ளும் போது, ஆதிரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கம்ருதீனுக்கு லெஃப்ட் அண்ட் ரைட்: இது மட்டும் இல்லாமல் சக போட்டியார்கள் அவர் மீது விமர்சனங்களை முன் வைத்தால் அதை முறையாக அணுகாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், இரண்டாவது புரோமோவில், விஜய் சேதுபதியிடம், " பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள், லக்சுரி வீட்டில் இருப்பவர்களை ஏதாவது சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் சபரியும் இருக்கிறார் என்று எனக்கு தோன்றுகிறது என்று பேசினார். உடனே விஜய் சேதுபது, "இப்போது நீங்கள் தான் உங்க வீட்டு ஆட்களுக்கு சப்போர்ட் செய்வதைப் போல ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு பாலிடிக்ஸ் செய்யறீங்களோ என்று தோன்றுகிறது என்று கூறினார்.
ஆதிரைக்கும் ரெய்டு: அடுத்து கமருதீன் ஏதோ பேச முற்பட, விஜய் சேதுபதியோ, நீங்க உட்காருங்க கமருதீன். அடுத்த முறையாவது, கேட்கும் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லுங்கள் கம்ரூதின்" என்று கூறுகிறார். ஏற்கனவே ஆதிரையை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார் விஜய் சேதுபதி. அதாவது, " உங்கள் விருப்பத்திற்கு இருக்க இங்கு வரவில்லை. நாம் ஒரு விஷயத்தை விவாதிக்கும்போது அது வேறு, நாம் வேறு என்று புரிந்து கொள்ளத் தெரிய வேண்டும். இல்லை என்றால் எல்லாவற்றையும் பர்சனலாக எடுத்துக் கொண்டால் பாதிப்பு நமக்குத்தான். அது நல்லது இல்லை" என்று காட்டமாக கூறினார். இந்த இரண்டு புரோமோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











