Bigg Boss 9 : பாவாடை பாவாடை.. உள்ளே போனதும் சேட்டையை காட்டிய திவாகர்.. எச்சரித்த VJ பார்வதி!
சென்னை: பிக்பாஸ் சீசன் 9இல் களமிறங்கி உள்ள ஒவ்வொரு போட்டியாளர்களும் ஏதோ ஒரு வகையில் அவர்களின் தனித்திறமையால் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தவர்கள். இந்த சீசனில் முதல் போட்டியாளராக வீட்டிற்குள் சென்றவர் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் தான். இவர் வீட்டிற்குள் செல்வதற்கு முன்னர் விஜய் சேதுபதி சில அறிவுரைகள் சொல்லி அனுப்பினார், ஆனால் அவற்றையெல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு, திவாகர் தனது வழக்கமான சேட்டைகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டார்.
இவரை பிக்பாஸ்க்குள் தேர்வு செய்யக் காரணமே, "பல கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்வுக்கு பின்னரே வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை பிக்பாஸில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் மருத்துவ துறை குறித்து குறிப்பாக அவரது பிசியோதெரபி துறை குறித்து கேட்ட கேள்விகளுக்கு மிகச் சரியான பதிலை அளித்துள்ளார். இதன் காரணமாகவே அவரை பிக்பாஸ் குழு தேர்வு செய்துள்ளது" என்று விஜய் சேதுபதி தெரிவித்தார்.

ஜொள்ளு: அதேபோல் இரண்டாவது போட்டியாளராக களமிறங்கிய அரோராவை வீட்டிற்குள் சந்தித்து பேசி விட்டு, வெகு நேரம் கழித்து, தேவையே இல்லாமல் உங்க கண் அழகாக இருக்கிறது என்று கூறினார். இதைக் கேட்டதும் அங்கு இருந்த மூன்றாவது போட்டியாளரான எஃப்.ஜே அந்த பொண்ணுக்கு உன்னோட பேத்தி வயசு ஆகுது என்று கூறி கலாய்த்தார்.
பாவாடை பாவாடை: அதன் பின்னர் மேலும் சில போட்டியாளர்கள் எல்லாரும் சென்ற பின்னர், தனது வழக்கமான சில நடிப்பு தொல்லைகளான சிவாஜி போல நடிப்பது போன்ற காட்சியை நடித்துக் காட்டினார். அப்படி நடித்துக் கொண்டிருக்கும் போது அவர் நடந்து வர, அருகில் நின்று கொண்டு இருந்த பார்வதியின் உடையை மிதிக்க, உடனே அவர் " ஏய் பாவாடை பாவாடை " என்று கூறினார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கடுப்பான பிரவீன் காந்தி: இது மட்டும் இல்லாமல், இயக்குநர் பிரவீன் காந்தியிடம் சென்று, இங்குள்ள மற்ற போட்டியாளர்கள் எல்லாம், ஏற்கனவே பல ஆண்டுகள் வி.ஜே.வாக இருந்துள்ளார்கள். இது மட்டும் இல்லாமல் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக பிரபலமாக இருக்கிறார்கள். ஆனால் நான் கடந்த ஒரு வருடத்தில்தான் இணையத்தில் பிரபலமானேன் என்று கூறிக் கொண்டு இருக்க, பிரவீன் காந்தியோ அவரை அவாய்ட் செய்ய, குட்.. குட்.. குட்... என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார். இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இந்த வாட்டர் மெலன் திவாகர் சரியான ஆர்வக்கோளாறு போலயே என்று பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications