தவறா தொடுறான் கம்ருதீன்.. ரெண்டு பொண்ணுங்க கான்செப்ட்.. பிக் பாஸில் உமன் கார்டை எடுக்கும் பாரு!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் ஏகப்பட்ட அடல்ட் கன்டென்ட் அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் கிளம்பி வரும் நிலையில், நிகழ்ச்சியின் போக்கு அப்படியே ஆண் போட்டியாளர்களை பெண்கள் டார்கெட் செய்யும் அதே பழைய கதைக்கு மாறுவதாகவே தெரிகிறது.

விஜே பாரு திவாகருடன் தொடர்ந்து நெருங்கி பழகி நட்பாகி வருகிறார். பார்வதியை கவர்வது போல திவாகர் போட்ட லீலைகள் எல்லாம் கடந்த வாரம் ரசிகர்களை கடுப்பாக்கியது. அதை விட ஒரே சிறையில் பாருவும் கம்ருதீனும் அடைக்கப்பட்ட நிலையில், இங்கேயே ஜாலியாக இருக்கிறது என்றும் "எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை" என வெளியே ஃபேக் டிராமா ஆடத் தேவையில்லை என்றார்.

Bigg Boss Tamil 9 Vj Parvathy says Kamrudin touched her in a bad way shocks fans
Photo Credit:

மேலும், ரொம்ப பசிக்குது, சாப்பிடணும், நைட்ல சாப்பிடணும்னு கம்ருதீனிடம் எல்லை மீறி ஆபாசமாக பேசியதே பார்வதி தான். ஆனால், இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் கம்ருதீன் பேட் டச் பண்றான் என திவாகரிடம் பாரு புலம்பும் காட்சிகளை பிக் பாஸ் டீம் வெளியிட்டுள்ளது/

2 பொண்ணுங்க கான்செப்ட்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு பெண்ணிடம் காதல் கொள்வது போன்ற டிராமாக்களை இதற்கு முன்பாக ஆரவ் - ஓவியா காலம் தொட்டு கவின் - லாஸ்லியா காலம் என பல காதல் கதைகளை பார்த்துவிட்டோம். நிவாஷினியுடன் - அசல் கோலார் மோசமாக பழகுகிறார் என்கிற சர்ச்சைகளும் வெடித்தன. அதன் பின்னர், பெண்களிடம் தவறாக நடந்துக் கொள்கிறார், பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிய கொடுமை எல்லாம் நடைபெற்றது. இந்நிலையில், 2 பொண்ணுங்களுக்கு ஒரே நேரத்துல ரூட் விடுற கான்செப்ட்டை கம்ருதீன் கையில் எடுத்திருக்கான் என பார்வதி அவர் மீது பழி சொல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பேட் டச் பண்றான்: தவறான எண்ணத்தில் பேட் டச் பண்றான் என்பதும் தனக்குத் தெரிவதாக வாட்டர்மெலன் திவாகரிடம் பார்வதி புகார் சொல்லும் ப்ரோமோ தற்போது வெளியாகி பரபரப்பை பற்ற வைத்துள்ளது. இந்த சீசனுக்குப் பிறகு விஜய் சேதுபதியே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என்றும் கமல் கிரேட் எஸ்கேப் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X