twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இது சமத்துவ அறத்தின் வெற்றி... விக்ரமனுக்கு ஆதரவாக ட்வீட் செய்த இயக்குநர் நவீன்...

    |

    சென்னை: கடந்த 105 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 6 நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

    அசீம், விக்ரமன், ஷிவின் மூவருமே டைட்டில் வின்னர் என்ற கனவுகளோடு பிக் பாஸ் பைனல் ஸ்டேஜ் ஏறினர்.

    இறுதியாக ஷிவின் முதலில் எவிக்சனாக, அசீம் - விக்ரமன் இருவரில் யார் வெற்றி என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.

    அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விக்ரமன் ரன்னர் அப் எனவும், அசீம் டைட்டில் வின்னராகவும் அறிவிக்கப்பட்டார். இந்த முடிவு குறித்து பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில், இயக்குநர் நவீனும் ட்வீட் செய்துள்ளார்.

    பிக் பாஸ் சீசன் 6 கிராண்ட் பினாலே...அசீம் ஹாஷ்டேக் டிரெண்டிங்...பரபரப்பாகும் பிக் பாஸ் களம்!பிக் பாஸ் சீசன் 6 கிராண்ட் பினாலே...அசீம் ஹாஷ்டேக் டிரெண்டிங்...பரபரப்பாகும் பிக் பாஸ் களம்!

     பிக் பாஸ் சீசன் 6

    பிக் பாஸ் சீசன் 6

    அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6, நேற்றுடன் முடிவுக்கு வந்தது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் ஜிபி முத்து, அசல் கோலாறு, ஷிவின், ரச்சிதா, மைனா, மகேஸ்வரி, சாந்தி, ராபர்ட் மாஸ்டர், அமுதவாணன், ராம், கதிர், அசீம், விக்ரமன், நிவாஷினி, ஷெரினா, ஜனனி, ஆயிஷா என மொத்தம் 21 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தனர். இவர்களில் அசீம், விக்ரமன், ஷிவின், கதிர், அமுதா, மைனா ஆகிய 6 பேர் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றனர். அப்போதும் கதிர் 3 லட்சம் ரூபாய் பண மூட்டையுடனும், அமுதா 11.75 லட்சம் பணப் பெட்டியுடனும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். மைனா மிட் வீக் எவிக்சன் ஆனார்.

     டைட்டில் வென்ற அசீம்

    டைட்டில் வென்ற அசீம்

    இறுதியாக விக்ரமன், அசீம், ஷிவின் இந்த மூவர் மட்டுமே இறுதிப் போட்டிக்கான மேடையில் ஏறினர். அதிலும் முதல் ஆளாக ஷிவின் வெளியேற்றப்பட்டார். இதனால் அசீம் - விக்ரமன் இவர்களில் யார் டைட்டில் வின்னர் என்ற போட்டி வந்தது. இதில் அதிகமான ரசிகர்களின் ஆதரவோடு விக்ரமன் தான் டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அசீம் தான் டைட்டில் வின்னர் என கமல் அறிவித்ததும் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

     நெட்டிசன்கள் அதிருப்தி

    நெட்டிசன்கள் அதிருப்தி

    ஆரம்பம் முதலே நேர்மையாகவும் கண்ணியமாகவும் தனது கேம்மை ஆடி வந்தார் விக்ரமன். ஆனால், அசீம் மற்ற போட்டியாளர்களை வசைபாடியும் அவர்களை தரக்குறைவாக பேசியும் சண்டை போட்டு வந்தார். பல இடங்களில் அசீம் செய்த தவறுகளை தட்டிக்கேட்ட விக்ரமன், ரசிகர்களிடம் அதிக ஆதரவை பெற்றார். இதனால் விக்ரமன் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆவர் என எதிர்பார்க்கப்பட்ட விக்ரமன் ரன்னர் அப் ஆனது பலருக்கும் அதிருப்தியளித்துள்ளது. மேலும் அசீம் இந்த வெற்றிக்கு தகுதியே இல்லாதவர் எனவும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

     டைரக்டர் நவீன் ட்வீட்

    டைரக்டர் நவீன் ட்வீட்

    இந்நிலையில், மூடர் கூடம் பட இயக்குநர் நவீன் விக்ரமனுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். அதில், "சில ஆயிரம் ஆண்டுகளாக நம் மனங்களில் விதைக்கப்பட்டிருக்கும் மடமைகளை, ஒரு நூறு ஆண்டில் அகற்றுவதென்பது Mission Impossible தான். முழு சமத்துவம் அடையாவிடினும் பெரியார் அம்பேத்கரின் வெற்றி பெரியதே ஒரு நூறு நாட்களில் தோழர் விக்ரமனின் வெற்றியும் அப்படியே. சமத்துவ அறத்தின் வெற்றியே இது" என பதிவிட்டுள்ளார். டைட்டில் வெல்லவில்லை என்றாலும் தொடர்ந்து பலரின் ஆதரவு விக்ரமனுக்கு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Aseem emerged as the title winner of Bigg Boss season 6. The much-awaited Vikraman became the runner-up. While netizens are commenting that Vikraman is the real winner, director Naveen has commented in support of Vikraman.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X