»   »  வெளியில போய் எல்லாரையும் செஞ்சிடுவேன்: காமெடி பண்ணும் 'கால்சியம்' காயத்ரி

வெளியில போய் எல்லாரையும் செஞ்சிடுவேன்: காமெடி பண்ணும் 'கால்சியம்' காயத்ரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெளியே போய் எல்லாரையும் செஞ்சிடுவாராம்ல காயத்ரி.

பிக் பாஸ் வீட்டிற்கு புது போட்டியாளராக நடிகர் ஹரிஷ் கல்யாண் இன்று வந்துள்ளார். வந்த வேகத்தில் அவர் கட்டிப்பிடி மன்னன் சினேகனுடன் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

ஹரிஷ் வருகையால் நிகழ்ச்சியின் போக்கில் மாற்றம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஓவியா

ஓவியா விஷயத்தில் தனக்கு வருத்தம் உள்ளதாக சினேகன் ஹரிஷிடம் கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் எல்லோருக்கும் சின்ன பங்கு இருக்கு முக்கியமா ஆரவ்னு சொல்லலாம் என்கிறார் ஹரிஷ்.

ஆரவ்

ஆரவ்

இத்தனை நாட்களாக பிக் பாஸ் வீட்டில் சோலோ ப்ளே பாயாக ஆரவ் சுற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில் ஆரவை டார்கெட் செய்ய ஹரிஷை இறக்கியுள்ளார் பிக் பாஸ் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

காயத்ரி

காயத்ரி

வாய் வாய் வாய் இல்லைனா நாய் தூக்கிட்டு போயிடும் என்று சினேகன் பற்றி காயத்ரியிடம் கூறுகிறார் ஆரவ். இன்று ஆரவும், காயத்ரியும் கூட்டு சேர்ந்து சினேகனை கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள்.

செஞ்சிடுவேன்

செஞ்சிடுவேன்

இந்த வாரம் சாட்டர்டேல மாறும் பாருங்க என்று ஆரவ் கூற மாறலைனு வச்சுக்கோ வெளியில போய் எல்லாரையும் செஞ்சிடுவேன் என்கிறார் காயத்ரி. காயத்ரி வெளியே வரட்டும் என்று ஒரு கூட்டம் காத்திருக்க அவர் என்னவோ செஞ்சிடுவேன் என்கிறார்.

English summary
Harisha Kalyan is seen discussing about Oviya issue with Snehan in a new promo video of Big Boss. Gayathri is seen getting angry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil