»   »  செய்தி வாசிப்பாளருடன் காதல்! சன் நியூஸ் நிருபர் மீது இரண்டு மனைவிகள் புகார்!!

செய்தி வாசிப்பாளருடன் காதல்! சன் நியூஸ் நிருபர் மீது இரண்டு மனைவிகள் புகார்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Complaint against Sun TV Reporter
சென்னை: தங்களை ஏமாற்றிவிட்டு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக உள்ள பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்ய முயற்சி செய்வதாக தனியார் தொலைக்காட்சி நிருபர் மீது அவரது முதல் இரண்டு மனைவிகள் புகார் கூறியுள்ளனர்.

சென்னை மயிலாப்பூரில் வசித்து வருபவர் ராஜராஜராஜன். இவர் சன் நியூசில் அவுட்புட் எடிட்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி சாருமதி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஒராண்டுக்குக்குப் பின்னர் இவர்கள் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதற்குக் காரணம் சன் டிவியில் செய்திவாசிப்பாளராக உள்ள மைதிலி என்பவருக்கும் ராஜராஜராஜனுக்கும் ஏற்பட்ட தொடர்புதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மைதிலியை ராஜராஜராஜன் மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அவரது இரண்டு மனைவிகளும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் குறித்து ராஜராஜனின் இரண்டாவது மனைவி சாருமதி செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது,

என் கணவர் ராஜராஜராஜன், சன் "டிவி'யில் அவுட்புட் எடிட்டராக வேலை செய்கிறார். "தமிழ் மேட்ரிமோனி' மூலம் அவரது அறிமுகம் கிடைத்தது. பி.காம்., படித்த அவர், மாதம், 54,000 ரூபாய் சம்பளம் வாங்குவதாக தெரிவித்தார். அவருக்கும், எனக்கும், கடந்தாண்டு பிப்ரவரியில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் திருமணம் நடந்தது.

என் தாய் லலிதா, வரதட்சணையாக, 25 சவரன் அளித்திருந்தார். எங்கள் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த போது, சன் "டிவி'யில் செய்திவாசிப்பாளராக வேலை பார்க்கும் மைதிலியுடன் என் கணவருக்கு தொடர்பு ஏற்பட்டது.

அந்தப் பெண் என் கணவரின் மொபைல் போனுக்கு அடிக்கடி பேசினார். நள்ளிரவில் கூட, மணிக்கணக்கில் என் கணவரின் மொபைல் போனுக்கு அந்த பெண் பேச ஆரம்பித்தார். அவளுடன் பேசுவதை நான் தட்டிக் கேட்டேன். அதற்கு என்னை அடித்து துன்புறுத்தினார். என் மாமியார் ஜானகியும் இதற்கு உடந்தையாக செயல்பட்டார்.

எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ராஜராஜராஜன் பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. அவர் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா, கண்ணமங்கலம், கொங்காரபட்டு கிராமத்தை சேர்ந்த சிவசக்தி என்ற பெண்ணை, கடந்த 2002ம் ஆண்டே திருமணம் செய்து கொண்டதாக, தகவல் கிடைத்தது. அவர்களுக்கு, 10 வயதில் பெண் குழந்தை உள்ளதும் தெரிய வந்தது. முதல் மனைவியை ஏமாற்றி கையெழுத்து வாங்கி, அவரிடம் இருந்து ராஜராஜராஜன் விவாகரத்து பெற்றுள்ளார்; இதற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளன.

முதல் திருமணத்தை மறைத்து, என்னை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவர், விருகம்பாக்கத்தில் உள்ள, சின்மயா வித்யாலயா பள்ளியில், 10ம் வகுப்பு மட்டுமே படித்திருக்கிற தகவல் கிடைத்தது. திருமணம் ஆனவுடன், ஒரு ஆண்டுக்கு பிறகே குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என, கண்டிஷன் போட்டார். ஏற்கனவே ஒரு பெண்ணை ஏமாற்றி உள்ளார். இது போன்ற நபர்கள் சமுதாயத்தில் வாழவே கூடாது; அவரை தூக்கில் போட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல் மனைவி சிவசக்தி, "ராஜராஜராஜன் எனது மாமா மகன். எங்களுக்கு, 2002ம் ஆண்டு, திருமணம் நடந்தது. என்னுடன் ஒரு ஆண்டு கூட அவர் வாழவில்லை. இதற்கிடையே, நான் கர்ப்பமானேன். எனக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் முகத்தை கூட அவர் பார்க்கவில்லை. அவளுக்கு 10 வயது ஆகி விட்டது.

அந்தக் குழந்தை எனக்கு பிறக்கவில்லை என, கூறி வருகிறார். நான் அவருக்கு தான் அந்த குழந்தையை பெற்றேன் என நிரூபிக்க தயாராக இருக்கிறேன். அவர், "டி.என்.ஏ' சோதனைக்கு தயாரா? என்று கேட்டார். ராஜராஜராஜனின் மோசடி குறித்து, வேலூர் போலீசில் புகார் கொடுத்து உள்ளேன். என்னை ஏமாற்றி, கையெழுத்து வாங்கியவர், கோர்ட்டில் "எக்ஸ் பார்ட்டியாக' விவாகரத்து பெற்றுள்ளார்.

என்னை அவர் விவகாரத்து செய்த விவரமே எனக்குத் தெரியாது. இரண்டாவது மனைவி சாருமதி, என்னை சந்தித்து, விவகாரத்து செய்ததற்கான ஆவணங்களை என்னிடம் காண்பித்தார். மாமா மகன் என்பதால், அவர் மீது, போலீசில் புகார் கொடுத்ததோடு நின்று கொண்டேன். அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் எண்ணம் இல்லை. அவர், என்னைப் போன்று, பல பெண்களை ஏமாற்ற துணிந்து விட்டார். அவர் மீது, சட்ட ரீதியான நடவடிக்கையை, போலீசார் எடுக்க வேண்டும்.'' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அந்த மனுவில் உள்ள விவரங்களின் உண்மை தன்மை குறித்து விசாரித்து, மேல் நடவடிக்கை எடுக்க, அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. முதல் இரண்டு மனைவிகளின் புகார் குறித்து ராஜராஜனிடம் விசாரித்த போது அவர் கூறியதாவது:

மேட்ரிமோனியல் மூலம் சாருமதியின் தகவல் கிடைத்தது. ஊரறியதான் திருமணம் செய்து கொண்டோம். எந்த சிக்கல் இல்லாமல் திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. திடீரென சாருமதியின் குடும்பத்தினர் பத்து லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்தனர். அந்தப் பணத்தை கொடுக்க நான் மறுத்துவிட்டேன். இதனை கருத்தில் கொண்டு என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக இருவரும் சேர்ந்து என்மீது பொய்யான புகார் கொடுத்துள்ளனர் என்றார்.

English summary
Complaint has been filed againt Sun TV employee for cheating two wives to marry a third one who is a news reader in the same TV.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil