»   »  கொஞ்சம் டீசன்ட்டா திட்டுங்க.. வேண்டுகோள் விடுக்கும் தெய்வமகள் குடும்பம்!

கொஞ்சம் டீசன்ட்டா திட்டுங்க.. வேண்டுகோள் விடுக்கும் தெய்வமகள் குடும்பம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
கொஞ்சம் டீசன்ட்டா திட்டுங்க.. வாணி போஜன் கதறல்- வீடியோ

சென்னை: டீசன்ட்டாக திட்டுமாறு தெய்வமகள் குடும்பத்தினர் வீடியோ வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சன்டிவியில் நாள்தோறும் இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் தெய்வமகள். இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
குறிப்பாக அண்ணியார் காயத்ரியை திட்டாதவர்கள் இருக்க முடியாது. சத்யாவுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு அதிகம்.

ரசிகர்கள் சலிப்பு

ரசிகர்கள் சலிப்பு

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நியாயம், நீதி, நேர்மை என சத்யா கணவரான பிரகாஷை பாடாய் படுத்தி வருகிறார். இது ரசிகர்களிடையே சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.

லைவில் வந்த வானிபோஜன்

லைவில் வந்த வானிபோஜன்

யூட்யூப்பில் வெளியாகும் அந்த சீரியலை பார்த்து கண்டமேனிக்கு திட்டி பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெய்வமகள் சீரியலில் சத்யா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வானி போஜன், செட்டில் இருந்தபடியே தெய்வமகள் குடும்பத்தினருடன் லைவ் கொடுத்தார்.

வரவேற்புக்கு நன்றி

அதில் காயத்ரி, குமார் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினர். தெய்வமகள் சீரியலுக்கு அளிக்கும் வரவேற்புக்கு அவர்கள் நன்றி கூறினர்.

டீசன்ட்டாக திட்டுங்கள்..

டீசன்ட்டாக திட்டுங்கள்..

மேலும் யூட்யூப்பில் பதிவிடும் கமெண்டுகளை தாங்கள் பார்ப்பதாக கூறிய அவர்கள் கொஞ்சம் டீசன்ட்டாக திட்டுங்கள் என கூறினர். இயக்குநர் சொல்வதையே தாங்கள் செய்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

’வாடி தொடப்பக்கட்டை’

’வாடி தொடப்பக்கட்டை’

அந்த வீடியோவில் காயத்ரியை குமார் சீரியலில் அழைப்பது போலவே, 'வாடி தொடப்பக்கட்டை' என்று கூறி அழைத்தார். படு ஜாலியாக லைவில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தனர் சத்யாவும் காயத்ரியும்.

செட்டில் கலகலப்பு

செட்டில் கலகலப்பு

இதுபோல் ஒன்றாக தெய்வமகன் குடும்பத்துடன் சேர்ந்திருப்பது கடினம் என்பதால் இன்று லைவில் பேசியதாகவும் அவர்கள் கூறினர். சீரியலில் கடிந்துக்கொள்ளும் காயத்ரி செட்டில் கலகலப்பாக பேசியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

English summary
Deiva magal Vani bhojan was live on facebook. Deivamagal Gayathri, Kumar, Sathya were responding to the Fans questions. They were requested fans to scold decently.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil