மாஸ்டர் செஃப் தமிழ் டைட்டிலை வென்ற தேவகி... பரிசுதொகை எவ்வளவு தெரியுமா ?
சென்னை : சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர்செஃப், தற்போது இந்தியாவில் பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. முதலில் இந்தியில் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் யாரும் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.
அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கிலும் ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கி நடத்தப்பட்டது. தமிழில் சன் டிவி.,யில் இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதியும், தெலுங்கில் ஜெமினி டிவி.,யில் தமன்னாவும் தொகுத்து வழங்கி வந்தனர்.

மலையாளம், கன்னடத்தில் மாஸ்டர்செஃப்
இந்தியாவில் மிகவும் பிரபலமாகி வரும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி விரைவில் கன்னடம் மற்றும் மலையாளத்திலும் துவங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியை மலையாளத்தில் ப்ருத்விராஜ் சுகுமாறனும், கன்னடத்தில் சுதீப்பும் தொகுத்து வழங்க உள்ளனர்.

இறுதிப் போட்டியில் 4 பேர்
இந்நிலையில் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வந்தது. இதில் 14 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில், 10 பேர் எலிமினேஷன் மூலம் வெளியேற்றப்பட்டனர். தேவகி, நித்தியா, கிருத்திகா, வின்னி ஆகிய நான்கு பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

கிராண்ட் ஃபினாலே
மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இதற்காக செம மாஸான ப்ரோமோக்களை சன் டிவி ஒளிபரப்பி வந்தது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாஸ்டர் செஃப் தமிழ் டைட்டிலை தேவகி வென்றார்.

பரிசுத்தொகை இது தான்
நித்தியா இரண்டாவது பரிசையும், கிருத்திகா மூன்றாவது பரிசையும், வின்னி நான்காவது பரிசையும் வென்றுள்ளனர். முதல் பரிசாக தேவகிக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகையும், ஷீல்டும் வழங்கப்பட்டது. முன்னதாக போட்டியாளர்கள் பெற்ற மதிப்பெண்களும் வெளியிடப்பட்டது.

போட்டியாளர்களின் மதிப்பெண்கள்
இதில் முதல் பரிசை வென்ற தேவகி 60 க்கு 54 மதிப்பெண்களும், நித்தியா 53 மதிப்பெண்களும், கிருததிகா 44 மதிப்பெண்களும், வின்னி 43 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். முதல் பரிசை வென்ற தேவகிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











