twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Kizhakku vasalserial: நாகப்பன் பொண்ணுதான் எனக்கு உயிர் பிச்சை தந்தாள்!

    |

    சென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியலில் வீட்டுக்கு தலை குனிந்து திரும்பி வந்த தேவராஜ், அந்த நாகப்பன் பொண்ணுதான் எனக்கு உயிர் பிச்சை போட்டாள் என்று சொல்கிறார்.

    ரொம்ப ஆசையாக ரொம்ப நாள் எதிரியாகவே பாவித்துவிட்ட நாகப்பனைப் பார்த்து, இனி இருவரும் நண்பர்களாகி விடலாம் என்று சமரசம் பேச அவர் வீட்டுக்கு போறார் தேவராஜ். இதற்காக இரவு முழுவதும் தூங்காமல் ஆசையாக இருந்தார்.

    ஆனால், தேவராஜின் ஆளான ராமு, நாகப்பன் தனியாக அதிகாலை வெளியில் வந்திருக்கார்னு தெரிஞ்சுக்கிட்டு, தந்திரமாக நாகப்பனை கத்தியால் குத்திடறான். மகளின் தோளில் சாய்ந்து உயிரை விட்டுடறார் நாகப்பன்.

    நாகப்பன் பிணத்தை

    நாகப்பன் பிணத்தை

    சமரசம் பேசப்போன தேவராஜ், நாகப்பனை பிணமாகப் பார்த்துட்டு, நண்பா நண்பா என்று கண்ணீர் விடறார். தேவராஜ்தான் நாகப்பன் கொலையானதுக்கு காரணம் என்று, நாகப்பனின் ஆட்களை விட்டு, நாகப்பனின் மனைவி தேவராஜை கொல்ல சொல்றாங்க.வேணாம், நிறுத்துங்கன்னு சொல்லித் தடுக்கறா நாகப்பனின் மகள் யாழினி. அப்பாவை கொன்னவனுக்கு தண்டனை தரக் கூடாதுன்னு சொல்றியா யாழினின்னு அம்மா கேட்கறாங்க.

    பொறுங்க அம்மா

    பொறுங்க அம்மா

    நான் ஒண்ணும் செய்ய வேணாம்னு சொல்லலை. ஆனால், பதினோரு நாள் பொறுமையா இருங்கம்மான்னுதான் சொல்றேன்னு சொன்ன யாழினி, யாரும் அவரை எதுவும் செய்யக் கூடாது. அவர் பாட்டுக்கு பார்த்துட்டு போகட்டும்னு ஆட்களுக்கு கட்டளை போடறா யாழினி. பிறகு தேவராஜ் வீட்டுக்கு திரும்பிடறார்.

    ராமு ஷங்கர்

    ராமு ஷங்கர்

    நாகப்பனைக் கொலை செய்த ராமு,தேவராஜின் மகன் சங்கரிடம், தான் நாகப்பனை துடி துடிக்க கொன்ற கதையை சுவாரஸ்யமா விவரித்து கூறுகிறான். சங்கரும், என்னையும் அழைச்சு இருக்கலாமே... என்னோட கத்தியும் அவன் உடம்பில் இறங்கி இருக்கும்னு சொல்றான் சங்கர். எதுக்கு அவனை நானே துடி துடிக்க கொல்லணும்னு ஆசைப்பட்டேன். செய்துட்டேன்.. இதுதான் நான் தேவராஜ் ஐயாவுக்கு கொடுக்கும் பரிசுன்னு சொல்றான்.

    கிராமத்தில் கேஸ்

    கிராமத்தில் கேஸ்

    கிழக்கு வாசல் கிராமத்தில் முதன் முறையாக தேவராஜ், நாகப்பனைக் கொன்ற தனது ஆள் ராமு மீது கேஸ் குடுத்துட்டு வீட்டுக்கு போறார்.வீட்டில் மிகவும் பயத்துடன் தேவராஜை காணலைன்னு காத்துகிட்டு இருந்த மனைவி, தங்கை, தங்கையின் மகள் மூவரும் தேவராஜை கண்டு ஒடி வர்றாங்க. நீங்க உயிரோட வருவீங்கன்னு நான் நினைச்சு பார்க்கலைங்க. அவங்க வீட்டுக்கு எதுக்கு போனீங்கன்னு கேட்கறாங்க.

    பொண்ணு யாழினி

    பொண்ணு யாழினி

    நான் ஒண்ணு நினைச்சு போனேன்.அங்கே வேற ஒண்ணு நடந்துருச்சு. எனக்கு நாகப்பன் பொண்ணுதான் உயிர் பிச்சை போட்டு,அனுப்பி வச்சா.அவளை ரொம்ப நல்லா வளர்த்திருக்கான் நாகப்பன்னு சொல்றார்.அதே போல நடுக் கடலில் மாட்டிகிட்ட ஒரு மீனவரை காப்பாத்த காசியை சமாதானம் செய்து அனுப்பி வைக்கறா யாழினி. நாகப்பன் ஐயா சாகலைங்க...உங்க உருவத்துல உயிரோட இருக்கார்னு நாகப்பன் ஆட்கள் பேசிக்கறாங்க.

    English summary
    Devaraj says that he has come home to talk to Nagappan, who has long been the enemy of the day, and that the two can no longer be friends. He wanted to sleep all night.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X