குக் வித் கோமாளியில் இப்படி ஒரு பிரச்சனையா... புதிய விளக்கம் தந்த நடுவர்

சென்னை : குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் பலர் சோஷியல் மீடியாவில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு நடுவர் சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் பாப்புலரான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி சமையல் ரியாலிட்டி ஷோவின் இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கப்பட்டுள்ளது.

துவங்கியது குக் வித் கோமாளி

துவங்கியது குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி ஜனவரி 22 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இதில் போட்டியாளர்களாக 10 பேரும், கோமாளிகளாக 10 பேரும் பங்கேற்று வருகிறார்கள். வழக்கம் போல் நடுவர்களாக செஃப்ஸ் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருந்து வருகிறார்கள்.

சர்ச்சையில் சிக்கிய நடுவர்

சர்ச்சையில் சிக்கிய நடுவர்

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி பற்றி நெட்டிசன்கள், ரசிகர்கள் பலர் சோஷியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதில் பலரும், குக் வித் கோமாளி 3 உண்மையிலேயே புத்துணர்ச்சி தருவதாக உள்ளது. புதிய கோமாளிகள் கலக்குகிறார்கள். ஆனால் நடுவர்களில் ஒருவராக இருக்கும் செஃப் வெங்கடேஷ் பட் கோமாளிகளை, நகைச்சுவை என்ற பெயரில் அடித்து காயப்படுத்துவது ஏற்க கூடியதாக இல்லை என பலரும் தெரிவித்து வருகிறார்கள். வெங்கடேஷின் செயலுக்கு ரசிகர்கள் பலர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

வெறும் ஷோவாக பாருங்கள்

வெறும் ஷோவாக பாருங்கள்

இந்நிலையில் இது பற்றி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெங்கடேஷ் விளக்கம் அளித்துள்ளார். அதில், அனைவரின் புகழ்ச்சி மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி. குக் வித் கோமாளி சீசன் 3 ஐ தற்போது துவக்கி உள்ளோம். நீங்கள் அனைவரும் படுக்க செல்வதற்கு முன் மனம் விட்டு சிரித்திருப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன். தயவு செய்து இதை டிவி ஷோவாக பாருங்கள். இதற்கு தீர்ப்பளிக்க வேண்டாம்.

இது தான் நோக்கம்

இது தான் நோக்கம்

இவை அனைத்தும் உங்களை சிரிக்க வைப்பதற்காக மட்டுமே. ஆனால் சிலர் இதை தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என தெரியும். இது யாரையும் காயப்படுத்துவதற்காக இல்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் எந்த அளவிற்கு நாங்கள் ஃபன் பண்ணியிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். என்ஜாய் பண்ணி பாருங்கள். ஈசியாக, லேசாக எடுத்துக் கொள்ளுங்கள் என விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

CWC புது Comali Sheethal Clarin Unknown Biography | Cook With Comali Sheethal
இப்படி ஒரு விளக்கமா

இப்படி ஒரு விளக்கமா

இருந்தாலும் ஃபன் என்ற பெயரில் கோமாளிகளை வெங்கடேஷ் தாக்குவதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளதை சோஷியல் மீடியாக்களில் வெளிப்படுத்தி உள்ளனர். முதல் இரண்டு சீசன்களை ஜாலியாக கடந்து வந்த குக் வித் கோமாளி, தற்போது முதல் முறையாக சர்ச்சையில் சிக்கி உள்ளது. இது சிலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வெங்கடேஷ் பட் மன்னிப்பு கேட்டுள்ளாரா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அவரின் இந்த விளக்கம், ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X