Don't Miss!
- News
நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக வாட்ஸ்அப் குரூப்பில் கமெண்ட்.. கொல்லப்பட்ட நபர்.. என்.ஐ.ஏ விசாரணை
- Sports
இதுமட்டும் நடந்திருந்தா என்ன ஆயிருக்கும்??.. உலக சாதனைக்கே வரவிருந்த விணை.. பும்ராவின் அதிர்ஷ்டம்!!
- Finance
'இந்த' துறையில் ரூ.30 கோடி-யா.. அசத்தும் ஈரோடு ஆர்த்தி..!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Automobiles
உங்க போர்டிங் பாஸில் SSSS என இருந்தால் அவளோதான்... இதுதான் அதோட அர்த்தமா? இனி கவனமா இருக்கணும்!
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
என்ன டைரக்டரே சீரியலை முடிக்கிற ஐடியா இல்லையா...பாக்யலட்சுமியை ஜவ்வா இழுக்குறீங்களே
சென்னை : பாக்யலட்சுமி சீரியலை ஜவ்வாக இழுத்து கொண்டே போகிறீர்களே எப்போ தான் முடிப்பீங்க... இப்போதைக்கு சீரியலை முடிக்கிற ஐடியா இல்லையா என ரசிகர்களே கேட்க துவங்கி விட்டனர். சீரியல் முடிந்து விடும் என்பதாலோ என்னவோ பல விஷயங்களை லாஜிக்கே இல்லாமல் செய்கிறீர்களே என பலரும் கேட்க துவங்கி விட்டனர்.
விஜய் டிவியில் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் பிரைம் டைம் சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமி. கிட்டத்தட்ட 1000 எபிசோட்களை நெருங்கி வரும் இந்த சீரியலை முதலில் சிவ சேகர் டைரக்ட் செய்து வந்த நிலையில், 550வது எபிசோடிற்கு பிறகு ஐ.டேவிட் இயக்கி வருகிறார்.
எங்க போனாலும் திட்டுறாங்க… இது வெறும் நடிப்பு… பாக்கியலட்சுமி சீரியல் கோபி உருக்கம் !

இத்தனை மொழிகளில் ஹிட்டா
முதலில் பெங்காலி மொழியில் ஒளிபரப்பாகி செம ஹிட்டான இந்த சீரியல் பிறகு கன்னடம், மராத்தி, மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட்டான இந்த சீரியல் தற்போது தமிழ் மற்றும் ஒடியா மொழியில் ரீமேக் செய்யப்பட்டு, ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

குடும்ப தலைவிகள் சீரியல்
குடும்ப தலைவிகள் படும் கஷ்டத்தை கூறுவதாக ஆரம்பத்தில் துவங்கப்பட்ட இந்த சீரியல், பிறகு பெண்களுக்கு நம்பிக்கை தருவதாக கதைக்களம் மாறியதால் பெண்களின் ஃபேவரைட் சீரியலாக மாறி உள்ளது. பாக்யாவின் கணவர் கோபி ரோலில் நடிக்கும் சதீஷ், இந்த சீரியலில் வெற்றிக்கு முக்கிய காரணம். இவருடைய கேரக்டருக்காகவே இந்த சீரியலை பார்ப்பவர்கள் அதிகம். பாக்யா, ராதிகா இருவரையும் ஏமாற்றி, ராதிகாவை திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறார். கோபி எப்போது சிக்குவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மெகா சங்கமம்
தற்போது சீரியலில் கோபியின் அப்பா ராமமூர்த்தியின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் நடந்தது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சத்யமூர்த்திக்கு கோபி பற்றிய உண்மை தெரிந்து விடுகிறது. ராதிகா வீட்டிற்கு நேரடியாக செல்லும் தனமும், மூர்த்தியும் கோபியை தான் ராதிகா இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள போகிறார் என தெரிந்து கொண்டனர். ராமமூர்த்திக்கு கோபி-ராதிகா பற்றிய உண்மை தெரிந்ததும், செம ட்விஸ்ட் இருக்கு என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாக கதையை புஸ் என்று ஆக்கினார்கள்.

உண்மையை சொல்லவே மாட்டீங்களா
இப்போது மூர்த்திக்கும், தனத்திற்கும் உண்மை தெரிந்து விட்டதாக காட்டுகிறார்கள். கோபியை தான் ராதிகா திருமணம் செய்து கொள்ள போகிறார் என்பதை தெரிந்து கொண்டு வந்து, கோபியிடம் சண்டை போடுகிறார் மூர்த்தி. மீண்டும் ராதிகா வீட்டிற்கு செல்லும் மூர்த்தி - தனம், கோபியை நல்லவர் இல்லை என்று மட்டும் தான் சொல்கிறார்களே தவிர, பாக்யாவின் கணவர் அவர் தான் என்பதை சொல்லவில்லை. பாக்யாவிடமும் உண்மையை சொல்லாமல், ராதிகாவிடமும் உண்மையை சொல்லாமல் ஊருக்கு கிளம்பி செல்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.

சீரியலை எப்போ முடிப்பீங்க
ராதிகாவிற்கோ, பாக்யாவிற்கோ கோபி பற்றிய உண்மை முகம் தெரிந்து விட்டதால் சீரியல் முடிந்து விடும் என்பதாலோ என்னவோ, இன்னும் சீரியலை முடிக்க மனம் இல்லாமல் ஜவ்வாக இழுத்துக் கொண்டு செல்கின்றனர். தனமும், மூர்த்தியும் இரண்டு முறை ராதிகா வீட்டிற்கு சென்றும் கோபி பற்றிய உண்மையை சொல்லவேயில்லை. இதெல்லாம் கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் இருக்கே, சீரியலை எப்போ முடிப்பீங்க என ரசிகர்களே கேட்க துவங்கி விட்டனர்.