»   »  பிக் பாஸை விட்டு போகும்போது கூட கொடுத்த காசுக்கு மேலேயே கூவிய கஞ்சா கருப்பு

பிக் பாஸை விட்டு போகும்போது கூட கொடுத்த காசுக்கு மேலேயே கூவிய கஞ்சா கருப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐயா, இந்த பரணியை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றுங்கள் என்று கஞ்சா கருப்பு கமல் ஹாஸனிடம் தெரிவித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆர்த்தியும், காயத்ரி ரகுராமும் சேர்ந்து ஜூலியை திட்டி அழ வைப்பதையே வேலையாக வைத்துள்ளனர். மேலும் கஞ்சா கருப்பு பரணியை டார்கெட் செய்து வந்தார்.

பரணியை அழ வைத்துக் கொண்டிருந்தார் கஞ்சா கருப்பு.

கஞ்சா கருப்பு

கஞ்சா கருப்பு

அனுயாவை அடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் கஞ்சா கருப்பு. பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுடன் செல்ஃபி எடுத்துவிட்டு ஓவியாவுடன் குத்தாட்டம் போட்டுவிட்டு கிளம்பினார் கஞ்சா கருப்பு.

பரணி

பரணி

பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பிய கஞ்சா கருப்பு பரணியை மட்டும் கண்டுகொள்ளவில்லை. இதை பார்த்த பரணிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்துவிட்டது.

Bigg Boss Tamil - Kanja Karuppu's peculiar ambition-Filmibeat Tamil
கமல்

கமல்

தயவு செய்து இந்த பரணியை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுங்கள் என்று கமல் ஹாஸனிடம் தெரிவித்தார் கஞ்சா கருப்பு. போகும்போது கூட பரணியை வம்பிழுத்துவிட்டு தான் சென்றார்.

ஆரார்

ஆரார்

பிக் பாஸ் வீட்டில் இருந்த நாட்களில் ஆராரிடம் இருந்து சமையல் கற்றுக் கொண்டதாகவும், கணேஷ் வெங்கட்ராமிடம் இருந்து யோகா கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார் கஞ்சா கருப்பு.

கணேஷ் வெங்கட்ராம்

கணேஷ் வெங்கட்ராம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி தான் வெற்றி பெறுவார் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் டைட்டிலை வெல்லும் வாய்ப்பு கணேஷ் வெங்கட்ராமுக்கு அதிகம் உள்ளது என்று கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார்.

English summary
Ganja Karuppu who is known for fighting with Bharani has got eliminated from the Big Boss programme.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil