»   »  பச்சை குழந்தையை கொல்வது எப்படி பாடம் நடத்தும் டிவி சீரியல்கள்- விபரீத வில்லிகள்

பச்சை குழந்தையை கொல்வது எப்படி பாடம் நடத்தும் டிவி சீரியல்கள்- விபரீத வில்லிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவி சீரியல்களில் வில்லிகள் செய்யும் வில்லத்தனங்கள் எல்லை மீறி வருகிறது. யாரையும் நம்பி வீட்டுக்குள் விடக்கூடாது என்பதைப் போல உள்ளது சீரியலில் ஒளிபரப்பாகும் சீன்கள். கர்ப்பிணிக்கு விஷம் வைக்கச் சொல்வதும், பச்சைக் குழந்தையை கொலை செய்வது எப்படி என்றும் பாடம் நடத்துகின்றன டிவி சீரியல்கள்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் சீரியலில் வில்லி காயத்ரி செய்யும் வில்லத்தனங்கள் விபரீத போக்கினை எட்டியுள்ளது. விகடன் டெலிவிஷ்டாஸ் தயாரித்துள்ள தெய்வமகள் சீரியல் அண்ணிக்கும், கொழுந்தனுக்கும் இடையே நடக்கும் சண்டையும் சவாலும்தான்.

எத்தனை நாளைக்குத்தான் இருவரின் சவாலை மட்டுமே காட்டுவது? ஜெய்ஹிந்த் விலாஸ் வீட்டை அடைய வேண்டும் என்பதற்காக சின்னச் சின்ன வில்லத்தனங்கள் செய்து வந்த காயத்ரி, கொழுந்தன் பிரகாஷின் மனைவி சத்யாவையும் கொலை செய்யும் அளவிற்கு போனதால் இப்போது சிறையில் இருக்கிறாள்.

கூட இருந்தே குழி பறிக்கும் வினோதினி

கூட இருந்தே குழி பறிக்கும் வினோதினி

அக்கா ஜெயிலுக்கு போக காரணமாக இருந்த குடும்பத்திற்குள் நல்லவள் போல நுழைந்துள்ள காயத்ரியின் தங்கை வினோதினிதான் தற்போது கருவியாக இருந்து வில்லத்தனத்திற்கு உதவி வருகிறாள். கூடவே நம்பியும் அவனது கை கூலியும் உள்ளனர்.

ஜெயிலில் செல்போன்

ஜெயிலில் செல்போன்

ஜெயிலில் இருந்தாலும் காயத்ரி அனைவரிடமும் செல்போனில் பேசி காரியத்தை சாதித்து கொள்கிறாள். தன்னை சிறைக்கு அனுப்பியவர்களை பழிவாங்க முதலில் கார்த்திக்கின் காரில் பிரேக் வயரை கட் செய்ய சொல்கிறாள் அதில் சுஜாதா மாட்டிக்கொள்ள சிறு விபத்துடன் போகிறது.

கர்ப்பிணிக்கு விஷம்

கர்ப்பிணிக்கு விஷம்

சுரேஷ் மனைவியும் சத்யாவின் தங்கையுமான தாரணிக்கு வளைகாப்பு ஏற்பாடு நடக்கிறது. அந்த வீட்டில் சந்தோசமாக யாரும் இருக்கக்கூடாது என்று கர்ப்பிணிக்கு விஷம் வைக்க சொல்கிறாள் காயத்ரி.

எண்ணெய் ஊற்றிய வினோதினி

எண்ணெய் ஊற்றிய வினோதினி

விஷம் வைக்க முடியாத காரணத்தால் எண்ணெயை ஊற்றி கர்ப்பிணி பெண்ணை வழுக்கி விழ வைக்கிறாள் வினோதினி. ஆனால் மருத்துவமனையில் போராடி இரண்டு உயிரையும் காப்பாற்றி விடுகின்றனர்.

குழந்தையை கொல்வது எப்படி

குழந்தையை கொல்வது எப்படி

தாயும், குழந்தையும் தப்பித்து விட்டதால் காயத்ரி தனது அடுத்த திட்டத்தை வினோதினியிடம் கூறுகிறாள். தண்ணீரில் நனைத்த துண்டு ஒன்றை குழந்தையில் முகத்தில் போட்டு விடும்படியும் அதில் மூச்சுத்திணறி குழந்தை இறந்து விடும் என்றும் ஐடியா சொல்கிறாள் காயத்ரி.

அக்காவிற்காக கொலை

அக்காவிற்காக கொலை

குழந்தையை கொல்ல வினோதினி மறுத்தாலும், காயத்ரி செய்யும் மூளைச்சலவையில் மனம் மாறும் வினோதினி, குழந்தையை கொல்ல ஒத்துக்கொள்கிறாள். தாரணியும், குழந்தையும் அசந்து தூங்கும் நேரத்தில் இதை செய்ய மருத்துவமனையிலேயே தங்குகிறாள் வினோதினி.

நிச்சயம் நடக்குமா?

நிச்சயம் நடக்குமா?

ஜெய்ஹிந்த் விலாஸ் வீட்டில் காயத்ரியின் கணவர் குமாருக்கு இரண்டாவது திருமணம் நடத்த முயற்சி நடக்கிறது. அதை தடுக்கிறாள் காயத்ரி. அதையும் மீறி நிச்சயம் வரை வந்து விட்டது. இந்த திருமண நிச்சயத்தை எப்படியும் நிறுத்துவேன் என்று பிரகாஷிடம் சவால் விடுகிறாள் காயத்ரி.

விபரீத வில்லத்தனம்

விபரீத வில்லத்தனம்

டிவி சீரியல்கள் டல் அடிப்பதால் டிஆர்பியை எகிற வைக்க வேண்டும் என்பதற்காகவும், வாசகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கவும், கர்ப்பிணிக்கு விஷம் வைப்பது, பச்சை குழந்தையை கொல்ல ஐடியா கொடுப்பது என விபரீத விஷயங்களை ஒளிபரப்புவதால் யாரையும் நம்பி வீட்டிற்குள் விடுவதற்கு கூட இனி யோசனை செய்வார்கள்.

English summary
Sun TV Serial Deivamagal Gayathri told her sister how to kill new born baby.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil