Just In
- 1 hr ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 2 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
- 3 hrs ago
விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!
- 3 hrs ago
சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Don't Miss!
- News
தற்சார்பு பாரதம் தந்த கொரோனா தடுப்பூசி- அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Automobiles
எப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்? வெளிவந்த நம்பும்படியான தகவல்...
- Finance
'மேட் இன் அமெரிக்கா' ஜோ பிடன் கையெழுத்திடும் புதிய உத்தரவு..!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
யாரை உண்மையா காதலிக்கிறீங்க? கவின் சொன்ன பதிலால் அதிர்ந்து போன சாக்ஷி மற்றும் பார்வையாளர்கள்!
சென்னை: யாரை உண்மையா காதலிக்கிறீங்க என்ற கேள்விக்கு கவின் அளித்த பதிலால் சாக்ஷி நொந்து போய்விட்டார்.
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் மக்களின் ஆதரவை பெற்றவர் கவின். இந்த சீரியைலின் மூலம் அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்தது.
சினிமாவில் சாதிக்க நினைக்கும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை அதற்கான பிளாட் ஃபார்மாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பின்னர் அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டார் போல கவின்.

பெண்களுடன் காதல் கடலை
எப்போதும் பெண்களுடன் காதல், கடலை என பொழுது போக்கி வருகிறார். மேலும் பெண்கள் விஷயத்தில் ஒரு சார்பாக நடந்து கொள்கிறார் கவின்.

காதல் ஒத்துவராது
சாக்ஷி, அபிராமி, ஷெரின், லாஸ்லியா என யாரை காதலிப்பது என தெரியாமல் குழம்பி போயிருந்தார் கவின். தானாக வலையில் வந்து விழுந்தார் அபிராமி, காதல் எல்லாம் நமக்கு ஒத்து வராது என்று நினைத்த கவின், அபிராமியின் காதலை ஏற்கவில்லை.

சாக்ஷியுடன் காதல்
இதைத்தொடர்ந்து சாக்ஷி, லாஸ்லியா என அவர்களின் பின்னால் சுற்றி வந்தார் கவின். லாஸ்லியா அண்ணன் என அழைக்க சாக்ஷியிடம் நெருக்கம் காட்டினார். அண்மையில் சாக்ஷியும் கவினும் காதலை பகிர்ந்து கொண்டனர்.

இதுதான் முக்கியமா?
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கவினிடம் பேசிய காலர், பிக்பாஸ் வீட்டில் யாரை நீங்கள் உண்மையாக காதலிக்கிறீர்கள் என கேட்டார். அதற்கு பதிலளித்த கவின், பிக்பாஸ் வீட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கு உங்களுக்கு இதுதான் முக்கியமாக தெரிகிறதா என்றார்?

வாடிப்போன சாக்ஷியின் முகம்
பின்னர் கேள்விக்கு பதிலளித்த கவின் நான் யாரையும் உண்மையாக காதலிக்கவில்லை. அத்தை மகள், மாமா மகளுடன் விளையாடுவதை போலதான் விளையாடுகிறேன் என்றார். கவினின் இந்த பதிலை கேட்டதும் சாக்ஷியின் முகம் உடனே மாறிவிட்டது.

பார்வையாளர்கள் வியப்பு
தான் கல்யாணம் செய்துகொள்ள விரும்பும் பெண்ணுக்கான குவாலிஃபிகேஷன்ஸ் இருப்பதாக 2 நாட்களுக்கு முன்புதான் சாக்ஷியிடம் கூறினார் கவின். இந்நிலையில் நேற்று யாரையும் உண்மையாக காதலிக்கவில்லை என அவர் கூறியது சாக்ஷிக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் வியப்பை ஏற்படுத்தியது.