twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிஸ்கவரி சேனலில் போராட்டக்களத்தில் சிக்கியவர்களின் கதை

    By Mayura Akilan
    |

    Discovery Channel
    வாழ்க்கையே ஒரு போர்க்களம் என்பார்கள். போராட்டம் மிகுந்த இந்த வாழ்க்கை சூழலில் உயிருக்கு ஆபத்தான சூழலில் சிக்கிக்கொண்டு போராடி மீண்டு வந்தவர்களின் உண்மைக் கதைகளை காட்சிப்படுத்துகிறது டிஸ்கவரி சேனல்.

    தினமும் இரவு ஒன்பது மணிக்கு டிஸ்கவரியில் ஒளிபரப்பாகும் ஐ ஷுட் நாட் பி அலைவ்' நிகழ்ச்சியில் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் முடிவெடுத்தாக வேண்டும் என்ற கட்டாய நிலையில் அவர்கள் எதிர்கொண்ட அனுபவகள் ஆகியவற்றை நேரடியாக தெரிந்து கொள்ளலாம்.

    பனி படர்ந்த கிர்கிஸ்தான் காடுகளில் ராட்சஸ பனிப்புயலுடன் நடக்கும் போராட்டம், கோஸ்டா ரிக்காவில் சுறாக்கள் நிறைந்த தண்ணீரில் நடக்கும் பயணம், மான்ட்டனா மலைகளில் கரடிகளின் தாக்குதல்கள், ஆப்பிரிக்காவில் காட்டு விலங்குகளின் தாக்குதல்கள் என பல்வேறுபட்ட ஆபத்தான சூழல்களையும், அவற்றை சமாளிப்பது பற்றியும் விளக்குகிறது, தொடர்.

    இதன் ஒவ்வொரு அத்தியாயமும் மனிதர்களின் தாங்குசக்தியை நிரூபிக்கிறது. அசாதரணமான ஆபத்தை எதிர்கொண்டு வெற்றிகரமாக மீண்டவர்கள் தங்கள் அனுபவங்களை மிகத் துல்லியமாக விவரிப்பதை காணலாம்.

    கடந்த வாரங்களில் நியூசிலாந்தில் நடைபயணம் மேற்கொள்ளும் இருவரின் கதை ஒளிபரப்பானது. ஒரு பனிச்சுவரை சுற்றி பயணம் மேற்கொள்ளும் இவர்கள் நிலையற்ற ஒரு பாறையின் விளிம்பில் பத்து நாட்கள் சிக்கிக் கொள்கிறார்கள். ஹவாயில் உள்ள 3 லட்சத்து முப்பதாயிரம் ஏக்கர் தேசிய பூங்காவில் பயணம் மேற்கொள்ளும் டூவி, பாதை தவறி ஐந்து நாட்களுக்குப் பின்னர் உயிருடன் திரும்புகிறார். மலை உச்சியில் இருந்து விழும் ஜோர்டான் நிகுரிட்டி நான்கு நாட்களுக்கு காணாமல் போவதையும், நண்பர்கள் கேரி மற்றும் டேவ் பயணம் செய்த எளிய ரக விமானம் கோளாறு ஆனதால் கரடிகள் மிகுந்த அலாஸ்காவில் சிக்கிக்கொள்வதையும் அதிலிருந்து அவர்கள் எவ்வாறு மீண்டனர் என்பதையும் ஒளிபரப்பினார்கள்.

    நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் தங்களின் வீர சாகசங்களினால் பார்வையாளர்களை கட்டிப்போடுவதுதான் நிகழ்ச்சிக்கு சிறப்பம்சமாகும்.

    English summary
    Five people try to survive a heavily edited episode of I Shouldn't Be Alive.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X