Just In
- 1 hr ago
நீங்கதான் ரியல் ஸ்டார்கள்.. பெண் போலீஸ் அதிகாரிகளை அப்படி பாராட்டிய நடிகை அனுஷ்கா!
- 1 hr ago
'பஹிரா' படபிடிப்பு முடிந்தது.. சம்மரில் ரிலீஸ்!
- 1 hr ago
வாவ்.. லாஸ்லியா, தர்ஷன் படத்துக்கு பூஜை போட்டாச்சு.. டைட்டிலே வித்தியாசமா இருக்கே.. ரசிகர்கள் குஷி!
- 1 hr ago
கையில் கோடாரியுடன் முரட்டு லுக்கில் அல்லு அர்ஜுன்.. 'புஷ்பா' ரிலீஸ் தேதி கெத்தாக அறிவிப்பு!
Don't Miss!
- News
இந்த நிமிடமே நல்ல நேரம்!
- Lifestyle
ஒரே நைட்டுல உங்க தொப்பையை குறைக்க இத செஞ்சா போதுமாம்....!
- Sports
ஆகஸ்ட்டுல இங்கிலாந்து போகுது இந்திய அணி... இந்தியா ஏ அணியோட பயிற்சி ஆட்டத்துல விளையாடறாங்க!
- Finance
அம்பானிக்கு போட்டியாக களமிறங்கும் பிர்லா.. sabyasachi நிறுவனத்தின் 51% பங்குகளைக் கைப்பற்றல்..!
- Automobiles
இந்தியாவில் புதிய பஸ், டிரக் மாடல்களை அறிமுகப்படுத்தியது பாரத் பென்ஸ்!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Bigg Boss 3 Tamil: கவின் சொன்னால் கடவுள் சொன்ன மாதிரியா?
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் என்ன சொன்னாலும் சாக்க்ஷியும் கேட்கறார். அபிராமி இதனாலேயே கவினை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்து இருகார்.
இருந்தாலும், அந்த சரவணன் மீனாட்சி சீரியல் கவின் அபிராமி மனதில் விதைத்த கிரஷ், அவர் மனதை போட்டு பிசைந்துகொண்டுதான் இருக்கிறது.கிட்டாதாயின் வெட்டென மற என்கிற நிலைக்கு அபிராமி வந்துட்டார் போலும்.
கவினுடன் விஜய் டிவியின் போட்டியில் வெற்றி பெற்ற கிருத்திகா என்கிற பெண்ணுக்கு பேசும் வாய்ப்பு கிடைத்தது.எந்த ஒரு ஹவுஸ் மேட் உடனும் பேசலாம் என்றாலும், அவர் பேச விரும்பியது கவினுடன்தான்.

அபிராமி கவின்
கவினுடன் வந்த அன்றே விருப்பம் தெரிவித்தது அபிராமிதான். என் அம்மா சரவணன் மீனாட்சி சீரியல் பார்ப்பாங்க.எனக்கு சீரியல் பார்க்கறதே பிடிக்காது. ஆனால், இந்த கவின் நல்லா இருக்கானேன்னு அம்மா கூட உட்கார்ந்து சரவணன் மீனாட்சி சீரியல் பார்க்க ஆரம்பிச்சேன். அப்பவே இவன் மேல எனக்கு ஒரு கிரஷ் வந்துருச்சு. சொன்னாலும் புரிஞ்சுக்காம மச்சி மச்சின்னு பேசி பேச்சை மாத்திடறான்....மாங்கா மடையன்னு அபிராமியும், சாக்க்ஷியும் பேசிக்கொண்டார்கள்.

சாக்க்ஷி கவின்
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜெயிலுக்கு பக்கத்தில் அமர்ந்து பேசும் இடம் ஒன்று இருக்கிறது. அங்கு ஒரு நாள் இரவு நேரத்தில் கவினும், சாக்க்ஷியம் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.நான் பொட்டு வச்சு இருக்கறது நல்லா இருக்கான்னு முகின்கிட்ட கேட்டது உனக்கு பிடிக்கலியான்னு சாக்க்ஷி கேட்கறாங்க. பின்னே பிடிக்குமா...பொட்டு வச்சா நல்லா இருக்கும்னு சொன்னதே நான்தான். அன்னிக்கு போட்டு வச்சு இருந்தது நல்லா இருக்குன்னு சொன்னதும் நான்தான் மச்சான். ஆனா, நீ மட்டும் என்னை மதிக்கலைன்னு கவின் சொல்றார்.

பொட்டு வச்சால்
நான் நெற்றியில் போட்டு வச்சால் நிஜமா நல்லாருக்கான்னு சாக்க்ஷி கேட்க, மச்சி சூப்பரா இருக்குடா மச்சின்னு கவின் சொல்ல, அன்றிலிருந்து இன்று வரை சாக்க்ஷி ஒரு நாளும் பொட்டு வைக்காமல் இருந்ததில்லை. இப்போது மற்ற ஹவுஸ் மேட்ஸ் கூட நெற்றியில் பொட்டு வச்சுக்க மறப்பதில்லை. நிஜமா வெறும் நெற்றி பாழ்னு சொல்லுவாங்க. பிக் பாஸ் பொண்ணுங்க பொட்டு வச்சுக்கறது நல்லாத்தான் இருக்கு.

நீதான் மச்சி புரிஞ்சுக்கலை
அன்னிக்கு எனக்கு வர லவ்வர் குவாலிட்டீஸ் பத்தி பேசினேனே அது உன்னைப்பத்திதான் பேசினேன்.அதை நீ புரிஞ்சுக்கவே இல்லை.. நீ முட்டாள்டான்னு சாக்க்ஷி சொல்ல, நீதான் முட்டாள்....எனக்கு வரப்போகும் லவ்வரோட குவாலிஃபிகேஷன் முதல் நாள் சொன்னேன். அதுலயே நீ வந்துட்ட.உனக்குத்தான் புரியலை தத்தின்னு செல்லமா திட்டறார் கவின்.

கிருத்திகாவிடம் கவின்
ரசிகை கிருத்திகா கவினுடன்தான் பேசணும்னு சொல்லி, உங்களுடன் நட்பாக இருக்கும் சாக்க்ஷி, அபிராமி, ஷெரீன், லொஸ்லியா யாரை லவ் பண்ண போறீங்கன்னு கேட்டப்போ, யாரையும் இல்லை.வீட்டிலே என் மாமா அத்தை பொண்ணுங்களோட விளையாடற மாதிரிதான் விளையாடறேன்னு கவின் சொல்றார். அபிராமி, சாக்க்ஷி இருவர் முகமும் மாறிவிட்டது.
கவின் நீங்க பிக் பாஸ் வீட்டில் விளையாட வந்தீங்களா...வந்திருக்கும் பெண்களை அத்தை பொண்ணு, மாமா பொண்ணுன்னு நினைச்சு விளையாட வந்தீங்களா? மனசு எல்லா பொண்ணுங்களுக்கும் ஒண்ணுதாங்க!