For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிக்பாஸில் அடுத்த மாஸ் என்ட்ரி இவரா.... மாஸ்டர் பட நடிகருக்கு குவியும் வாழ்த்துக்கள்

  |

  சென்னை : பிக்பாஸ் சீசன் 4 முடிந்த உடனேயே அடுத்த சீசன் எப்போதும் துவங்கும் என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர். அடுத்து தேர்தல் வந்ததும் இந்த சீசனை கமல் தொகுத்து வழங்குவாரா, தேர்தலில் வெற்றி பெற்று கமல் முழு நேர அரசியலில் இறங்கி விட்டால் பிக்பாஸ் நிகழ்ச்சியை அவருக்கு பதில் யார் தொகுத்து வழங்குவார் என பல விதங்களில் கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்தது.

  தரமான படங்களுக்கு சொந்தக்காரர் சசிக்குமார்... பிறந்தநாள் ஸ்பெஷல்தரமான படங்களுக்கு சொந்தக்காரர் சசிக்குமார்... பிறந்தநாள் ஸ்பெஷல்

  கமலுக்கு பதில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்குவதாக கூட கூறப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததால், ஜுன் - ஜுலை மாதம் துவங்குவதாக சொல்லப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 தள்ளிப் போனது. இருந்தாலும் பிக்பாஸ் எப்போ என ரசிகர்கள் விடாமல் கேட்டு வந்தனர்.

  ஆகஸ்ட்டில் முதல் ப்ரோமோ

  ஆகஸ்ட்டில் முதல் ப்ரோமோ

  பிக்பாஸ் பற்றிய எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. கமலும் சினிமாவில் பிஸியாகி விட்டதால் இந்த ஆண்டு பிக்பாஸ் நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகம் வர துவங்கி விட்டது. இந்த சந்தேகங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆகஸ்ட் 31 ம் தேதி பிக்பாஸ் சீசன் 5 க்கான முதல் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டது.

  சந்தேகத்தை தீர்த்த ப்ரோமோ

  சந்தேகத்தை தீர்த்த ப்ரோமோ

  இதனால் பிக்பாஸ் சீசன் 5 விரைவில் துவங்க உள்ளதும், அதனை நடிகர் கமலே தொகுத்து வழங்க போவதும் உறுதியானது. அடுத்தடுத்து வெளியான 4 ப்ரோமோக்கள், மாற்றப்பட்ட லோகோ போன்றவற்றால் ரசிகர்கள் பயங்கர உற்சாகமாகினர். சோஷியல் மீடியாவில் போட்டியாளர்கள் பற்றி தினம் ஒரு பட்டியல் வெளியாகி வருகிறது.

  அக்டோபர் 3 ல் துவக்கம்

  அக்டோபர் 3 ல் துவக்கம்

  இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 வரும் அக்டோபர் 3 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிரம்மாண்ட நிகழ்ச்சியாக துவங்கப்பட உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்ற ஆர்வம் அனைவரிடமும் அதிகரித்தது.

  போட்டியாளர்கள் பட்டியல்

  போட்டியாளர்கள் பட்டியல்

  குக் வித் கோமாளி 2 டைட்டில் வின்னர் கனி, ஷகீலாவின் மகள் மிலா, நாடோடிகள் 2 ல் நடித்த நமீதா மாரிமுத்து, பிரபல மாடல் வனீசா க்ரூஸ், மிஸ்டர் இந்தியா கோபிநாத், சீரியல் நடிகை பவானி ரெட்டி, விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, இமான் அண்ணாச்சி என பலரின் பெயர்கள் போட்டியாளர்கள் பட்டியலில் இருப்பதாக கூறப்பட்டது.

  இவரும் இருக்காரா

  இவரும் இருக்காரா

  இந்த வரிசையில் லேட்டஸ்ட் தகவலாக மாஸ்டர் படத்தில் நடித்த சிபி சந்திரனும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளதாக தகவல் பரவி உள்ளது. இதனால் சோஷியல் மீடியாவில் பலர் சிபிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு விஜய் அருகில் நடனமாடிய சிபி, விஜய்யின் மாணவர்களில் ஒருவராக நடித்திருப்பார்.

  அக்டோபர் 3 வரை காத்திருக்கனும்

  அக்டோபர் 3 வரை காத்திருக்கனும்

  இவர்களில் எத்தனை பேர் நிஜமாகவே பிக்பாஸ் வீட்டிற்குள் போக போகிறார்கள், இது தான் இறுதி போட்டியாளர் பட்டியலா என்பது அக்டோபர் 3 ம் தேதி மாலை 6 மணிக்கு தான் தெரியும். அதுவரை அனைவரும் பொறுமையுடன் காத்திருக்க தான் வேண்டும்.

  English summary
  lot of bigg boss tamil season 5 contestants list go around in social media. latest buzz said that, master movie actor sibi chandra is also in final contestant list. but no official announcement revealed yet.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X