»   »  எலிமினேஷன்: பிக் பாஸின் டக்கால்டி வேலையை கண்டுபிடிச்ச நெட்டிசன்கள்

எலிமினேஷன்: பிக் பாஸின் டக்கால்டி வேலையை கண்டுபிடிச்ச நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று யாரை வெளியேற்றப் போகிறார்கள் என்று நெட்டிசன்களுக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று ஒருவரை வெளியேற்றப் போகிறார்கள். அது அனுயாவா, ஜூலியானாவா என்று நிகழ்ச்சியை நடத்தும் கமல் ஹாஸனே கேட்டுள்ளார்.

அவர் கேள்விக்கு நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் சுவாரஸ்யமான பதில்கள் அளித்துள்ளனர்.

பிக் பாஸ்

வெளியேற்றத்தின் விளிம்பில் அனூயா மற்றும் ஜூலியானா.. @Vivo_India #BiggBossTamil #VivoBiggBoss என்று பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ட்வீட்டியுள்ளனர்.

தெரியும்

நீ என்ன சொல்ல போறன்னு எனக்கு தெரியும்.. இதான் முதல் வாரம் அதனால் எலிமினேஷன் இல்லன்னு சொல்ல போற.. அதான!#BiggBossTamil என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்ரீ

ஸ்ரீ

இரண்டு பேரையும் பண்ண மாட்டாங்க. ஸ்ரீ விலகி விட்டதால் இவர்களுக்கு மீண்டும் ஓரு வாய்ப்பு னு சொல்லுவாங்க. திட்ட மிட்டு நடக்கற மாதிரியே இருக்கு. ஜுலியை காயத்ரியும் ஆர்த்தியும் ஓட்டு ஓட்டுனு ஓட்டுராங்க ஆன ஜுலி தெரியாத மாதிரியே நடந்துக்குது. அதனால்தான் இந்த சந்தேகமே வருது. இயல்பாக யாரும் இல்லை எல்லாம் செயற்கை என ஒருவர் ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டுள்ளார்.

காயத்ரி

காயத்ரி

முதலில் அந்த காயத்ரி ரகுராமை எலிமினேட் பண்ணுங்கப்பா, பாதி பிரச்சனை தீர்ந்துவிடும் என நெட்டிசன் ஒருவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

அனுயா

அனுயா

ஜூலிய வச்சு தான் நிகழ்ச்சி நடக்குது...ஜூலிக்கு கெடச்ச அவமானமே போதும் அவர எலிமினேட் பண்றது நல்லது தான்.. ஆனால் பண்ணமாட்டாங்களே..ஜூலிய எலிமினேட் பண்ணிட்டா யாரும் பிக் பாஸ் பாக்கமாட்டாங்க..அதனால் அனுயாவா தான் இருக்கும் என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

English summary
Netizens already know as to who is going to get eliminated in Big Boss show being hosted by Kamal Haasan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil