»   »  முதல் நாளில் பெரிதாகக் கவராத பிக் பாஸ்!

முதல் நாளில் பெரிதாகக் கவராத பிக் பாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் ஹாஸன் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் நாளில் பெரிதாகக் கவரவில்லை.

வெளிநாடுகள், பாலிவுட்டில் பிரபலமான இந்த நிகழ்ச்சி முதல் முறையாக தமிழுக்கு வந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி மூலம் முதல் முறையாக தொலைக்காட்சிக்கு வந்துவிட்டார் கமல் ஹாஸன்.

Kamal's 'Bigg Boss' fails to impress

இந்த நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் பங்கேற்றாலும், பெரிய அளவில் சொல்லிக் கொள்ளக் கூடிய நடிகரோ, அரசியல் பிரபலமோ இல்லை என்பதால் முதல் நிகழ்ச்சி சப்பென்று ஆகிவிட்டது. நமீதா தவிர வேறு பெரிய நடிகர்கள் யாருமில்லை.

நிகழ்ச்சியை நடத்தும் கமல் ஹாஸனும் இதில் பெரிதாக ஆர்வம் காட்டிய மாதிரி தெரியவில்லை. சுத்தப் போர் எனும் அளவுக்குதான் முதல் நிகழ்ச்சி இருந்ததாக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் காமெடியாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு கமல் தன் ஸ்டைலில் பேசியவை அவரது ரசிகர்களையே கூட ஈர்க்கவில்லை என்பது பொதுவான கருத்து.

இனிவரும் நாட்களிலாவது நிகழ்ச்சி சுவாரஸ்யமாக அமையுமா? கமல் கையில் இருக்கிறது!

English summary
Kamal Haasan looked totally disinterested and bored throughout in BigBoss show.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil