»   »  லோஹிப், ஸ்லீவ் லெஸ்… கண்ணை கூச வைக்கும் தொகுப்பாளினிகள்… கொஞ்சம் கவனிங்க பாஸ்

லோஹிப், ஸ்லீவ் லெஸ்… கண்ணை கூச வைக்கும் தொகுப்பாளினிகள்… கொஞ்சம் கவனிங்க பாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் புடவை, சல்வார், சுடிதார் சகிதம் வந்து வணக்கம் சொன்ன காலம் மலையேறி விட்டது. இன்றைக்கு லோ ஹிப் ஆடைகளும், ஸ்லீவ்லெஸ் டாப்ஸ்சும் போட்டு வந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகின்றனர்.

சினிமாவில் கவர்ச்சி ஆடை அணிவது என்பது வேறு விசயம்... குழந்தைகள், வயதானவர்கள், இளைஞர்கள் என அனைவரும் குடும்பத்தோடு அமர்ந்து வீட்டில் டிவி பார்க்கும் போது நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினிகள் அணியும் ஆடைகள் கவர்ச்சிகரமானதாக இருப்பது காண்பவர்களின் கண்களை கூசச் செய்கிறது.

டிவி தொகுப்பாளினி

டிவி தொகுப்பாளினி

சன் டிவியில் குழந்தைகளுக்கான ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகள் கொஞ்சம் கண்ணியமாக உடையணிந்து கொண்டு வருவது அவசியம் என்கின்றனர் ரசிகர்கள். சன் டிவியில் சன் சிங்கர் என்ற குழந்தைகள் பாடும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியின் உடை முகம் சுழிக்க வைக்கிறது என்பது ரசிகர்களின் கருத்தாகும்.

கவர்ச்சி உடைகள்

கவர்ச்சி உடைகள்

அதேபோல சன் சூப்பர் சேலஞ்ச் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் தொகுத்து தொகுப்பாளினியின் கவர்ச்சிகரமான உடையும் கண்ணை கூச வைக்கிறது என்பது ரசிகர்களின் விமர்சனமாக உள்ளது.

நடுங்க வைக்கும் நடுவர்கள்

நடுங்க வைக்கும் நடுவர்கள்

அதேபோல நிகழ்ச்சிக்கு நடுவர்களாக வருபவர்களின் உடைகளோ... அதைவிட ஆபசமாகத்தான் இருக்கிறது. நடுவர்களாகவோ, சிறப்பு விருந்தினர்களாவோ வரும் நடிகைகள் தாங்கள் போவது டிவி நிகழ்ச்சிக்குத்தான் என்பதை உணர்ந்து கண்ணியமாக ஆடை அணிந்து வரலாம் என்பது ரசிகர்களின் கருத்து.

சில தொகுப்பாளினிகள்

சில தொகுப்பாளினிகள்

புடவையும், கண்ணை உறுத்தாத ஆடைகளை அணிந்து கொண்டு பாந்தமாய் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். அந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் இன்றைக்கு பெரும்பாலான நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினிகள் கவர்ச்சிக்கன்னிகளாகவே வலம் வருகின்றனர் என்பது ரசிகர்களின் கருத்து.

English summary
TV Anchors and Judges with Low hip and sleeveless costumes irritate the viewers in TV reality shows.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil