மாதம்பட்டி ரங்கராஜ் வழிக்கு வருகிறாரா.. இறங்கி அடித்த கிரிசல்ட்டாவுக்கு முதல் வெற்றியா.. இப்படி ஆகிப்போச்சே!
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசல்ட்டாவின் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் எதுவுமே நடக்காததைப் போல நிகழ்ச்சிகள், பார்ட்டிகளில் கலந்து கொண்டு வந்தாலும், ஜாய் கிரிசல்ட்டா விடுவதாக இல்லை. நாள்தோறும் ஏதாவது வீடியோ, நெருக்கமான புகைப்படங்கள் என பலவற்றையும் பகிர்ந்து கொண்டு வருகிறார்.
இப்படி இருக்கும்போது ஜாய் கிரிசல்ட்டாவால் தனது நிறுவனத்திற்கு கடந்த 15 நாளில் மட்டும் ரூபாய் 12.5 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனவும், எனவே தன்னைப் பற்றி அவதூறு கருத்துக்களை ஜாய் கிரிசல்ட்டா தெரிவிக்க கூடாது எனவும் மாதம்பட்டி ரங்கராஜின் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
அவரது நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், " ஜாய் கிரிசல்ட்டா தன்னைப் பற்றி அவதூறாக பேசிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும். தனது கேட்டரிங் நிறுவனமான மாதம்பட்டி பாகசாலாவுக்கு எதிராக அவர் பேசக்கூடாது என தடை விதிக்க வேண்டும்" எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில், கடந்த 15 நாளில் தங்களது நிறுவனத்திற்கு ரூபாய் 12.5 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஜாய் கிரிசல்ட்டா தரப்பில், வெறும் ரங்கராஜ் என்று குறிப்பிட்டால் தெரியாது என்பதால், மாதம்பட்டி ரங்கராஜ் என்று குறிப்பிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

முதல் வெற்றி: இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணையை பார்க்கும்போது, பலரும் இது ஜாய் கிரிசல்ட்டாவுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று பேசி வருகிறார்கள். அதாவது, ஜாய் கிரிசல்ட்டா, மாதம்பட்டி ரங்கராஜ் உடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். ஆனால் ஜாய் கிரிசல்ட்டாவை மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை. இப்படி இருக்கும்போது, நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார் என்றால், ஜாய் கிரிசில்ட்டாவின் பேட்டி, புகார், அவர் பகிரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தான் என்றும் பேசி வருகிறார்.
வாய்ப்பு: அதே நேரத்தில் மாதம்பட்டி என்ற சொல் என்பது அவரது மாதம்பட்டி பாகசாலா என்ற நிறுவனத்தில் இடம் பெறும் பெயர் என்றாலும், ரங்கராஜே தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் என்றுதான் அடையாளப்படுத்திக் கொள்கிறார். மேலும், மாதம்பட்டி என்பது ஒரு ஊரின் பெயர் என்பதால், இந்த பெயரை பயன்படுத்த ஜாய் கிரிசல்ட்டாவுக்கு தடை விதிக்க வாய்ப்புகள் குறைவுதான் என்றும் கூறுகிறார்கள். எதோ எப்படியோ, சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டு இருந்த ஜாய் கிரிசல்ட்டாவுக்கு தனது திருமணம் மற்றும் கர்ப்பம் தொடர்பாக நீதிமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைக்கும் என்றும் சிலர் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











